பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8


தாயிடமிருந்து சேட்டறிந்தான். அவன் அமைதியாகப் பெருமூச்சைப் பிரித்தான், காரணம், எதிர் முகாம் ஒரளவு அமைதி பெறப் பழகிக் கொண்டிருந்தது !


அம்மா!’


என்ன, தம்பி?”


“ஒரு மாதிரி யிருக்கீங்களே. ஏனம்மா ?”


“ஒண்னுமில்லை !”


  • நல்லவேளை ஆமாம், சிந்தாமணியை நினைக்கிற போது, மனசுக்கு ரொம்ப வேதனையாகயிருக்குது. அம்மா !”


“வாஸ்தவம் தான்,ஆண்டவன் சோதனைக்கு நம்மாலே என்ன தேறுதல் சொல்ல முடியுது பாவம் !’


  • நீங்க சொல்றதுதான் சரி..ஆனாலும், சிந்தாமணியின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டாமா ?


‘கட்டாயம் செய்யத்தான் வேணும், நானும் அதைப் பத்தித்தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன் மாமல்லா !”


பயணத்தின் அலுப்பைத் தண்ண்ரீரில் கரைத்து, பயணத் தின் அயர்வுக்குப் பதில் கூற காலை உணவு அருந்தினான் மாமல்லன்,


ஊதைக் காற்று சிலிர்ப்பை அள்ளி வீசியது. அதன் வல்லமை இளம்பரிதியிடம் அஞ்சியது.


பிறர் அமைதிக்கு வழி வகுக்கப் பிரயத்தனம் செய்த அவனுடைய நிம்மதியைப் பறித்துக்கொள்ள வீட்டிலே ஒரு கடிதம் காத்துக்கொண்டிருந்த உண்மை ரகசியத்தை அவன் அப்போது அறியமாட்டான் ! -