பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 7


புனிதக் கோயிலின் கலசத்தின் உச்சியில் வீசப்பட்ட பூமாலையினின்றும் உதிர்ந்து விழுமல்லவா உதிரிப் பூக்கள் அந்தப் பாங்கிலே அவளது விழிகள் இரண்டும் நீர் சிந்தின.


‘அம்மா, நீ அழக்கூடாதம்மா, அரசாங்கம் ந ம் ப வயத்துக்குக் காட்டுப்பாடு வச்சிருக்காங்க, ஆண்டவன் நம்ப கண்ணிருக்கே கட்டுதிட்டம் வச்சிட்டான். நீ அழப்பிடாது கண்ணே !’ என்று சொல்லிவிட்டு, வேலாயுதம் அழுதார் அழுதார் அப்படி அழுதார். அழுகை பிறப்பித்த கண்ணிர்த் திவலைகளில் ஒன்று ஆண்டவனை அண்டியது,இன்னொன்று கர்ம வினையை நாடியது. பிறிதொன்று அவர் புதல்வி சிந்தாமணியைத் தேடியது, நான்காவது சிந்தாமணியின் அத்தான் குலோத்துங்கன் பேரில் குறி வைத்தது.


வியன் வெளியில் விரீத்த சடாமகுடம் தாங்கிய பயங்கர அருவம், கேட்போர் பதைக்குக்கும் சிரிப்பு என்ற அஞ்சல் செய்தது, அதற்குத்தான் விதி’ என்ற பட்டப் பெயரோ...!


சிந்தாமணி அழுகையை நிறுத்தியதுதான் தாமதம் கிழவரின் மூச்சே நின்றுவிட்டது :


சிந்தாமணிக்கு அடைக்கலம் அளித்த பெருமை கோசலை அம்மமாளுக்கே உரியது. பஞ்செனப் பஞ்சை யுள்ளம் பரதவித்துக் கொண்டிருந்தது. நெருப்பில் இருப்பது போன்ற ஓர் உணர்வு மாமல்லனுக்கு எழுந்தது. பஞ்சு, நெருப்பு- இவ்விரண்டின் கதையை ஊர்-உலகம் நன்றாக அறியும். ஏன், சிந்தாமணியும் அறிவாளே !


அலுவலகம் சம்பந்தப்பட்ட ஐந்தாறு நாளைய வெளியூர்ப் பயணம் முடிந்து அன்றைக்குத்தான் மாமல்லன் வீட்டிற்கு வந்தான். சிந்தாமணியின் மனநிலை பற்றித்


அ-2