பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£7


கராத்திரி முச்சூடும் நீங்க துரங்கலையா ? கண்னெல்லாம் ஒரே சிவப்பாயிருக்கே ?”


கட்டிலை விட்டு இறங்கிய அவன், அருகிருந்த மேஜை மீது காணப்பட்ட அந்தப் புகைப்படத்தை எடுத்து வேறொரு பத்திரிகையில் மறைத்துவிட்டு, மாடிக் கைப்பிடிச் சுவர் ஒரத்தில் நின்றான்.


சிந்தாமணி அனுப்பிய கேள்வியை அவன் மறந்து விடவில்லை. ஆனால் என்ன பதில் சொல்வதென்ற சிந்தனையைத்தான் அவன் மறந்து போனான். அவ்வாறு மறந்தது அவன் குற்றமா ?


வெந்நீர் போட்டிருக்கேன் ; போய்க் குளிச்சிட்டு வாங்க, முகம் தெளிவாயிருக்கும்” என்றாள் அவள்.


அன்றைக்கு வெள்ளிக்கிழமை. குளித்து முழுகி மஞ்சள் பூசி திலகம்;இட்டிருந்தாள் சிந்தாமணி நெளி நெளியாகப் படிந்திருந்த கேசத்தில் இரண்டொரு மயிரிழைகள் நெற்றி மேட்டில் ஒதுங்கின. வேறு சில இழைகள் கன்னங்களிலும் காதோரங்களிலும் படர்ந்திருந்தன. அவள் அவனையே பார்த்தாள்.


‘ஆகட்டும், சிந்தாமணி. நீ.நீங்க போங்க... போய்க் காலா காலத்திலே சாப்பிடுங்க !”


நேற்று இரவு தானும் தன் அம்மாவும் சஞ்சலத்தில் பங்கு பிரித்துக் கொண்டிருக்கையில், மெல்லிய இருமல் சத்தம் சிந்தாமணியின் அடித்தொண்டையிலிருந்து புறப் பட்டதையும், அவள் நெய்க்கிண்ணத்துடன் கூடத்துக்கு வந்ததையும் இப்பொழுது காலைப் பணிவிடைக்குத் தயாராயிருப்பதையும் எண்ணிப் பார்த்தான் மாமல்லன். பனிப்படலத்தில் முகங்காட்டும் புகைப்படம் போல அன்று ஒருநாள் புத்தகத்தில் சந்தித்த சிந்தாமணியின் உருவப்