பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邑


பந்தத்தை நீக்கிவிடு - அல்லால் உயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு !


அரியலூருக்கும் துரத்துக்குடி எக்ஸ்பிரஸுக்கும் பல ஆண்டுகளாகச் சொந்தம் உண்டு, பந்தமும் இருந்து வந்தது. மாமல்லன் எழும்பூர் சந்திப்பில் நின்றதும்தான், அவனுக்குச் சுய சிந்தனை புறப்பட்டு வந்தது. புறப்பட ஆயத்தமாகி நின்றது. ரெயில், திருச்சி பெட்டியில் ஏறினான், தோல் டையைப் பெஞ்சியில் வைத்தான். மூன்று பேர் களுடன் நான்காவது நபராக அமர்ந்த அவனுக்கும் இடம் ஒதுக்கித் தரப்பட்டது. ஒடும் ரெயிலில் அறிமுகமாகும் நட்பும் அன்பும் ஒடும் ரெயிலுடனேயே ஒடி விடுவது கிடையாது. ஒட்டி விடுவதுதான் வழக்கம், அதுவே தமிழ் மரபு.


“ஏன் ஸ்ார் ! அண்டி அரியலூருக்கு எத்தனை மணிக்குப் போய்ச் சேரும், தெரியுமா ? -


“பலார்னு விடியப் போய்ச் சேர்ந்திடும். தம்பி அரியலூர்தானா ?”


“இல்லீங்க, சொந்த ஊர் திருச்சி, இப்போ சொந்தக் காரங்க வீட்டுக்குப் போறேன்.


பொடி மூடு தழலின் மீது மூச்சுக் காற்றுப்பட்டாலும் போதும். நீறு பிரித்து நெருப்பு சிரிக்கத் தொடங்கிவிடும். அதே போல, முன் பின் பார்த்திராத மனித உள்ளங் களிடையே அன்பின் பரிவர்த்தனை நிகழ்ந்தவுடன், பாசி மறைந்து பற்றும், பாசமும் சிரிக்கத் தலைப்பட்டு விடும்.