பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4


‘என்ன அப்பா...நீங்க எதுக்கு கண்ணிர் விடணும் . உங்க மகள், இருக்கேனே! இதயம் இருக்கிறவங்க மத்தியிலே பண்பு காட்றவங்க இடையிலே கன்னிப்பெண் ஆனாலும் நான் கண்ணியமாக வாழமுடியும், உங்களையும் காப்பாத்த முடியும். நாலு எழுத்து சொல்லி வைச்சீங்களே, அது இனியாச்சும் உபயோகப்படட்டும் . நீங்க அழாதீங்க . அப்பா.. அழாதீங்க, ...”


‘அம்மா, உன்னை அனாதை ...”


வேலாயுதத்தின் உதடுகளை மூடினாள் பெண். “நான் அனாதையாக மாட்டேன், அப்பா !” என்றாள் அவள், அவளுடைய பார்வை அறைச் சுவர்களுக்கு நடுவில் சுற்றி விளையாடியது.


மாமல்லனின் சிந்தை திக்குத் தெரியாத காட்டிலே அலைந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவன் வேலாயுதத்திற்கு வேண்டியதைச் செய்து கொண்டுதான் இருத்தான்.


‘சித்தாமணி, உன் ‘


தொடர்ந்த பேச்சுக்குத் தொடர்பிணைக்க வாய்க்க வில்லை.


பேசாதீங்க அப்பா !” - உதடுகளுடன் கண்ணையும் மூடிக்கொண்டார் கிழவர்


“பயப்படாதீர்கள். பெரியவர் சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும். இப்போது நீங்களும் ஒன்றும் பேசாதீர்கள். அவரையும் பேச விடாதீர்கள். மிகவும் களைப்புடன் இருக்கிறார். நாளைக் காலையில் மறுபடியும் நானே வந்து பார்க்கிறேன்’ என்று விடை பெற்றார் டாக்டர்.