பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

প্ত


பாட்டைத் திறப்பது பண்ணாலே, இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே “


ஆண்டவனுக்குக் கண்ணாம்பூச்சி ஆட்டம் என்றால் ஒரே பித்தம் அவன் படைத்த பகுத்தறிவு உயிர்களே அவனுக்கு விளையாட்டுத் தோழர்கள்-தோழிகள். இந்த உயிர்ப் பிண்டங்களின் கண்கள் திறந்திருக்கும் நேரத்தில் கனவுகள் விழி வழி புகுந்து அவரவர்களுடைய இதயங் களிலே இடம் சேகரித்துக் கொள்கின்றன மேற்சொன்ன ஆணோ, அல்லது பெண்ணோ கனவுகளில் வாழ்ந்து புவியை மறக்கும் பொழுதிலே, படைத்தவன் இந்தப் படைப்புப் பொருள்களைப் பெயரிட்டு அழைத்துத் தன்னுடைய இந்தக் கண்பொத்தி விளையாட்டிற்குச் சேர்த்துக் கொள்கிறான்.


தெய்வத்தின் புதிர்ச் சிரிப்பு அக்கணத்தில்தான் தொடங்குகிறது, அதே தருணத்தில்தான், மனிதர்களுடைய தேம்பலும் ஆரம்பமாகிறது. இவர்களது கண்களை மூடி விளையாடும் பரம் பொருளின் கைகளே எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் எழுத்தாகவும் அமைகின்றது. ஈசனின் வேடிக்கைப் புன்னகை உலகில் படர்ந்த அதன் அலைகள் எங்கும் எதிரொலி செய்கின்றன. மனிதர்கள் அந்தக் குரலைக் காது கொடுத்துக் கேட்க முனைகிறார்கள். முடிவு, தோல்வி, அப்பாவி மனிதர்களின் கண்ணிர்த் துளிகள் ஒவ்வொன்றும் எழுப்பும் அழுகையை அவன் பார்க்கிறான்.