பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இராக்கெட்டுகள்


கால்வாயிலோ அல்லது வெறும் நிலத்திலோ வீழ்ந்து விட்டன.

செருமெனியில் சுமார் எட்டு ஆண்டுகள் நடைபெற்ற ஆராய்ச்சிக்குப் பின்னரே 1942 ஆம் ஆண்டில் வி-2 இராக்கெட்டு கண்டுபிடிக்கப்பெற்றது. இதன் உயரம் 46 அடி; அதன் விட்டம் 5 அடி 5 அங்குலம். எடை 14 டன், முதன் முதலாக இதனை பால்ட்டிக் கடற்கரையிலுள்ள பீனேமுண்டே (Peenemunde) என்ற இடத்திலுள்ள ஒரு பெரிய வட்டமான மேடையின்மீது நிறுத்தினர். சோதனை நாளன்று ஆய்வாளர்கள் சுறுசுறுப்பாகத் தம் செயல்களைக் கவனித்தனர். பணியாளர்கள் யாவரும் சோதனைப் புலத்தினின்றும் தொலைவில் நின்று கொண்டு கவனித்தனர். இராக்கெட்டைச் செலுத்துபவர்கள் தகுந்த பாதுகாப்பான இடங்களில் தங்கினர். இராக்கெட்டைச் செலுத்துவதற்குரிய சைகைக் குறிப்பு அளிக்கப்பெற்றதும் இராக்கெட்டு அதிக தூரத்திற்கு நெருப்பினைக் கக்கிக்கொண்டு கிளம்பியது. வானத்தில் சிறிது தூரம் கிளம்பியபின் திடீரென்று திசை மாறிப் பாய்ந்து பால்டிக் கடலில் 'பல்ட்டி' அடித்துக் கொண்டு விழுந்தது! இம் முயற்சி அறிவியலறிஞர்கட்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. அதன்பிறகு இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பெற்ற வி-2 இராக் கெட்டுச் சோதனையும் வெற்றியடையவில்லை. மூன்றாம் தடவையாக 1944 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் நடைபெற்ற சோதனை வெற்றி பெற்றது. அப்பொழுது இராக்கெட்டு மணிக்குச் சுமார் 3000 மைல் வேகத்தை. எட்டியது ; சுமார் ' 100 மைலுக்குமேல் பிரயாணமும் செய்தது. | ஆனால் மிகப் பெரிய, மிகச் சரியான, மிகவும் அதிகமான நாசத்தை விளைவிக்கக்கூடிய, இராக்கெட்டு ஆயுதங்கள்