பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

உணர முடியுமே என்ற எண்ணம் தான் காரணம். அதனால் அவள் காட்டிய இடம் சேர்ந்தேன்.

'நான் திருநெல்வேலிக்குப் போகிறேன். ஆகவே, நீங்கள் மதுரை போகும் வரை, சொல்ல வேண்டியதை எல்லம் சொல்லி முடிக்கலாம். ஏராளாமான நேரம் இருக்கிறது' என்றேன்.

அவள் துயரம் தளும்பிய குரலில் பேசினாள்; 'நான் கெட்டுப்போனவள். உங்கள் மதிப்புக்கும் அனுதாபத்துக்கும் அருகதையற்றவள், எனக்கு நீங்கள் மைரியாதை காட்ட வேண்டியதில்லை.'

அவள் ஆப்படி பேச ஆரம்பித்தது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு வேதனையையே தந்தது. தாழ்ந்து போன அவள் மேலும் தன்னைத் தானே தழ்த்திக் கொள்ள விரும்பியது. அதனால் சொன்னேன்: சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் மனிதர்களை எப்படி எப்படியெல்லாமோ ஆட்டி வைக்கின்றன. இவற்றின் காரணத்தால் மனிதத்தன்மை பறிக்கப்பட்டோ, நசுக்கப்பட்டோ போய்விடலாம். அதற்காக என்றுமே 'தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்து' போக வேண்டியதுதன் ஒரு முறை தவறிவிட்டவர்கள் என்பதை நான் ஆதரிக்கவில்லை. தவறுவது மனித இயல்பு. பிறகு திருந்தி, இழந்த மனிதத் தன்மையை மறுபடியும் பெற முயற்சிப்பதுதான் மனிதருக்கு அழகு. உங்கள் வாழ்க்கை உங்களை மிகவும் சோதித்திருக்கலாம் சோர்வுற்றுச் சாம்பிக் குவிந்துள்ள நீங்கள் எல்லோரிடமும் அவமதிப்புற வேண்டும் என்று எண்ணுவானேன்?...'

அநாவசியமாக நான் பிரசங்கம் பண்ணத் தொடங்கிவிட்டேனா என்ற சந்தேகம் எழவே, எனது பேச்சு நின்றுவிட்டது.

'நீங்கள் முதலிலேயே சொன்னீர்கள், சினிமாவில் சேருவது சுலபமல்ல என்று. பிறகு, சினிமாக்கலை இன்றைய நிலையிலே எப்படி உருப்படும் என்று கேட்டீர்கள். நீங்கள் சொன்னது சரிதான்..... உங்களைப் பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களிடம் என் வாழ்க்கையை - எக்ஸ்ட்ரா நடிகையின் கேவலமான