பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இராக்கெட்டுகள்


வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணமுள்ளன” என்றார் தந்தை.

மேலும் அவர் தொடர்ந்து கூறியது:

“வாணிகத்தில் சரக்குகளை வேகமாக ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குக் கொண்டுசெல்லுவது முக்கியமானது. அங்ஙனமே, ஜெட் முறையில் பொருள்களை உந்தித் தள்ளு தல் இராக்கெட்டுத் துறையில் அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. போரிடும் விமானங்கள், குண்டுகளை வீழ்த்தும் விமானங்கள், பல்வேறுவகை ஏவு கணைகள் (Missiles) இவற்றில் இம்முறை பெரிதும் பயன்படுகின்றது. ஆனால், அறிவியல் அறிஞர்கள் நவீன இராக்கெட்டினை ஒரு சிறந்த ஆய்கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இராக்கெட்டின் துணைகொண்டு வானொலி அமைப்பு, தொலைக். காட்சி அமைப்பு, ஒளிப்பட அமைப்பு போன்றவற்றை மிக உயரத்திற்கு அனுப்பி மேல்வளி மண்டலத்தைத் (Upper atmosphere) துருவி ஆராயவும், சூரியனை ஆராயவும் மனிதனால் இயலும். அவன் பூமியின் துணைக்கோள்களைப் படைத்து அவற்றைக்கொண்டு வெளிப்பரப்பிலும் (Outer space) தன்னுடைய ஆராய்ச்சியினை விரிவுபடுத்தக் கூடும்.

“பூமியைச் சுற்றியுள்ள அயனப்பாதையில் முதன் முதலாகச் செயற்கைத் துணைக்கோள் ஒன்றினை அனுப்பிய பொழுது தான் முன்னுக்குத் தள்ளும் இராக்கெட்டின் உந்துவிசையின் முழு ஆற்றலையும் திறனையும் அறிவிய லறிஞர்கள் அறிந்தனர். அமெரிக்காவில் விமானத்தில் பிரயாணம் செய்த ஒருவர் விமானத்தில் ஏறினபொழுது தான் இரஷ்யர்கள் [1]‘ஸ்புட்னிக்’ (Sputnik) என்ற துணைக்-

  1. ‘ஸ்புட்னிக்’ என்ற இரஷ்யச் சொல்லுக்கு ‘உடன்-செல்லும் பிரயாணி' (Fellow-traveller) என்பது பொருள்.