பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அவன் மீண்டும் கவனித்தாள். என்ன நினைத்தாளோ, மெதுவாக அருகில் வந்து நிவ்வு 'நமஸ்காரம், ஸார்.. இங்கே எங்கு வந்தீர்கள்? ஏன் வெளியே உல்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டாள்.

நான் சொன்னேன், தொடர்ந்து விசாரித்தேன்; 'என்ன, சினிமா உலகம் எப்படியிருக்கு? நட்சத்திர பூமி உண்மையில் தூரத்துப் பச்சையாகத் தோன்றுகிறதா; இல்லை, தென்றலும் குளுமையும் நிறைந்த பூஞ்சோலையாக உள்ளதா?.

'என்னத்தைத் சொல்ல ? ஏன் தான் சினிமாக்காரியாக மாறணும்னு ஆசைக்பட்டேனா என்றிருக்கு எனக்கு சில சமயம். வந்தச்சு, இனி என்ன செய்வது?' என்று கூறி பெருமூச்செறிந்தாள் அவள்.

'ஏன்! அதற்குள் இந்த வாழ்க்கை அலுத்து விட்டதா?' என்று கேட்டேன். அதில் கேலி சிறுது தொனித்திருக்கலாம். ஆனால் உடனேயே அதற்காக நான் வருந்தினேன். அவள் எதிர்பார்ப்பது நையாண்டியல்ல; அனுதாபம் தான் என்று சொல்லாமல் சொல்லியது அவள் பார்வை.

'என்ன செய்வது? ஆசைபடுகிறோம், ஆர்வத் துடிப்போடு ஆராயாமலே குதிக்கிறோம். முன்னேற முரண்டு பிடிக்கிறோம், ஆனால் முடிவு லட்சியச் சிதைவுதான். இலகுவில் தொட்டுவிட இயல்வதில்லை, எல்லாத் துறைகளுக்கும் இது பொது' என்றேன்.

'இப்படியிருக்குமென்று நான் நினைக்கவேயில்லை' என்றாள் அவள். நான் பதில் எதுவும் சொல்லாததனால் அவளே பேசினாள்; 'பெரிய கலை, சேவை கத்தரிக்கா சேமியா என்று பேசிவிடுகிறார்கள், ஆனால் நடைமுறையில், அம்மா! பயமாக இருக்கிறது, ஸ்டார்களைப் பற்றி, கலைக் கொம்பர்களைப் பற்றியெல்லாம் பக்க பக்கமாக எழுதுகிறவர்கள் ஒரு தடவையாவது எங்கள் அபிப்பிராயங்களைக் கேட்டு எழுதினால் என்னவாம்?....'