பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் வதும், காவலில் வைப்பதும், அவன்மேல் தண்டத்தைப் பிரயோகிப்பதும் அவனது சுதந்திரத்துக்கு விரோதமாகும். ஒரு மனிதனுக்குத் தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உண்டு. அவன் அதை வேண்டிய அளவில் உப யோகிக்கலாம். யுத்த ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமை, பொதுவான பாதுகாப்பு, சுயேச்சை என்பவை தற்காப்புக்கு உதவுகின்றன. சொத்துக்கோ உடலுக்கோ தீங்கு நேரிட்டால் நஷ்ட ஈடு பெறவேண்டி கியாயஸ்தலத் தில் வழக்குத் தொடரும் உரிமை ஒரு பிரஜைக்கு உண்டு. ஒரு பிரஜை தன் சொத்தைத் தன் விருப்பப்படியே செலவிடலாம்; விநியோகம் செய்யலாம் ; தொழில் விஷ யத்திலும் வியாபார விஷயத்திலும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம் ; எங்த வேலையிலும் அமரலாம் ; குடும்ப வாழ்க்கையை நடத்திவரலாம். இவைகளெல்லாம் விவில் உரிமைகளின்பாற்படும். தீவிர சம உரிமை வாதிகள் மாத் திரம் இவ்வுரிமைகளைக் குறைத்துவிட வேண்டுமென்றும், அப்பொழுதுதான் ஒவ்வொரு பிரஜைக்கும் வேண்டுமளவில் ஜீவனோபாயம் ஏற்படுமென்றும் அபிப்பிராயப்படுகிருர் e$@T, ; : « 4 . . . . . சட்டவரம்பிற்கு உட்பட்டு நியாயமான விஷயங்களைப் பற்றி ஆலோசிக்கும்பொருட்டுப் பொதுக் கூட்டங்களில் சேரவோ, விஷயங்களை வெளிப்படையாக எழுதவோ, பேசவோ பிரஜைகளுக்கு உரிமை உண்டு. இம்மாதிரியுள்ள முக்கியமான விவில் உரிமைகளையும், அரசியலுரிமைகளையும் பெறும்பொருட்டுப் பல நாடுகளில் நெடுங்காலம் மக்கள் போராடியிருக்கின்றனர். இவை உரிமைகளாக இருப்பி னும், பொதுஜன அமைதிக்கும், சன்மார்க்கத்திற்கும் விரோதமாக உபயோகிக்கக் கூடாதென்னும் ஒரு நிபந்தனை மாத்திரம் உண்டு. ஒரு தொழிலில், அமரவும், வேலைக்குத் தக்க கூலி பெற வும் பிரஜைக்கு உரிமை உண்டென்னும் கொள்கை சாதா ரணமாக இந்நாளில் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அதிக ஜனங்கள் வேலையில்லாமல் திண்டாடினல் அவ்விஷயத்தில் 6 .