பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மாற்றி விடுகிறார்கள். இவர்கள் பட்டணத்துக்கு வந்து கெட்டி குட்டிச் சுவராகத் தயாராகி விடுகிறார்கள்.

அவளும் இவ்விதம் வந்தவள் தான். அவளுக்கு பட்டணத்தில் யாரையும் தெரியாது. எந்த இடமும் தெரியாது என்றாலும் துணிந்துவிட்டாள். நேராக சினிமாக் கம்பெனி எதற்காவது போவது; அல்லது சினிமா பத்திரிகைக்காரர்களில் யார் உதவியுடனாவது செல்வது என்ற எண்ணத்துடன் வந்தவள் அவள். அது மாதிரி வேட்டையாடத் துணிந்த சந்தர்ப்பத்தில் தான் அவள் முதன் முதலில் நானிருந்த பத்திரிகை ஆபீஸீக்கு வந்தது.

இதையெல்லம் எனக்கு அறிவித்தது ஸ்டுடியோ நண்பன் ஒருவன். அவனுக்குத் தொழிலே இது தான். 'எக்ஸ்ட்ரா' வியாபாரம் என்று சொல்லலாம். படங்களுக்[க்த் தேவையான் எக்ஸ்ட்ரா நடிகைகளை முதலாளிகளிடம் அழைத்து வருவதும், சினிமாவில் சேர ஆசைப்படுகிற பெண்களுக்கு சான்ஸ் தேடித்தருவதும், ஒன்றிரு படங்களில் நடித்த பின் பிழைப்பின்றி அவதியுறும் எக்ஸ்ட்ராக்களுக்கு சான்ஸ் வாங்கித் தருவதும்; அந்த உதவிக்காக நடிகையிடமும் முதலளியிடமும் பணம் பெற்றுக்கொள்வதும்தன் அவன் பிழைப்பு, வாழ்க்கை அனைத்துமே. அவன்தான் அவளையும் சினிமாவில் சேர்த்து விட்டதாகச் சொன்னான்.

ஒருநாள் அவள் ஸ்டுடியோ ஒன்றின் வாசலில் நின்று கொண்டிருந்தாளாம். காலை எட்டு மணியிலிருந்து நின்றாளாம். மத்தியானம் இரண்டு இரண்டரை மணியாகியும் கூட அவள் அங்கேயே நின்றிருக்கிறாள். உள்ளே அவளை அனுமதிக்காமல் வழி மறைத்திருந்தது காவல். அவள் முதலளியைப் பார்க்க வேண்டும் என்றாளாம், எந்த முதலாளியை? எதற்காக என்ற கேள்விகள் எழுந்தன. அவள் ஏதாவது படத்திலே நடிக்க சான்ஸ் கேட்கவேணும் என்று சொல்லவும், வாசல் காப்பவன் என்னவோ கேலி பேசியிருக்கிறான். அவள் முகம் கறுத்து நின்றாளாம்.