பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

'என்ன சான்ஸு, எரு விழுந்த சான்ஸு! இந்த பீல்டே அப்படித்தான் ஸார். ஆளுக்கு ஆளு பழகுகிறதைப் பொறுத்திருக்கு. அந்த உதவி டைரக்டர் தயவு இப்ப இருக்கு அவளுக்கு. அது என்றும் நிலைத்திருக்கும்னு என்ன ஸார் நிச்சயம்? எக்ஸ்ட்ராக்கள், சில்லறை நடிகர்கள் பாடு கஷ்டம் தான். வாழ்க்கை ஒரே நிதானமாக இருக்கும்னு சொல்ல முடியாது' என்றான் அனுபவஸ்தன்.

முடிவு எனா ஆயிற்று? அவன் சொன்னதுதான் நடைமுறையில் நிகழ்ந்தது.


3

மேலும் சில மாதங்களுக்குப் பிறகு நான் புஷ்பாவைச் சந்திக்க சந்தர்ப்பம் துணை பிரிந்தது. எதிபாராத நிகழ்ச்சி தான் இதுவும்.

நான் திருநெல்வேலி போவதற்காக திருவனந்தபுரம் எக்பிரஸில் இடம் பிடித்து வசதியாக உட்கார்ந்த பிறகு சூழ்நிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். மங்களான வெளிச்சம் அழுது வழிந்து கொண்டிருந்த இடத்தில் ஒரு முகம் எனக்கு அறிமுகமானதாகத் தோன்றியது. கவனித்தேன். அவளும் கவனித்தாள், உடனேயே தலை குனிந்து கொண்டாள்.

அவள் தான், அந்த எக்ஸ்ட்ரா நடிகை புஷ்பா 'சொந்த ஊருக்குப் போகிறாள் போலிருக்கிறது. வந்து நாளாயிற்று அல்லவா? இரண்டு வருஷங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் முதன் முதலாக வீடு திரும்புகிறாள் என்று நினைக்கிறேன். அங்கு வரவேற்பு எப்படியிருக்குமோ? பாவம்' என்று நெஞ்சோடு புலம்பிக் கொண்டேன்.

அவள் என்னைப் பார்க்க விரும்பவில்லை என்று நினைத்தேன். அவள் முகம் அவ்விதமே கூறியது. என்ன