பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் உற்பத்தி மாறுபட்ட கொள்கைகள் எழுதுவதற்கு அவை கர்ரன. மாயின. தந்தைவழி, தாய்வழி என்பனவே அவ்விரண்டு. முதல் முத்லில் தந்தைவழி இருந்ததென்பவர்கள் தந் தையின் தலைமையின்கீழ்ப் பூர்விகக் குடும்புங்கள் இருந்தன. என்பர். அத்தகைய குடும்பத்தின் மூலபுருஷன் ஓர் ஆடவன். ஆண்வழி ஆணுக அந்தப் பரம்பரை வந்து கொண்டிருந் தது. குடும்பத்தில் உள்ள ஆடவர்களுள் வயசு முதிர்ந்த வனே அதனே ஆட்சிபுரியும் உரிமையுடைய தலைவன். தாய்வழிக் கொள்கையின் சார்பாக உள்ளவர்கள், பண்டைக் காலத்துச் சமூகத்தில் எல்லா இடங்களிலும் தந்தைவழிக் குடும்பமே இருக்கவில்லையென்று மறுக்கிருர் கள். இக் காலத்திலும் தந்தைக்குப் பின் மகனென்னும், பரம்பரையமைப்புக்கு அடியோடு மாறுபட்ட குடும்பங்க்ள் நாகரிகமற்ற வகுப்புகள் பலவற்றில் உள்ளனவென்றும், அக் குடும்பங்கள் தந்தைவழிக் குடும்பம் ஏற்படுவதற்கு முன்பே ஆதிகாலத்தில் இருந்தனவென்றும் அவர்கள் சொல் கிருர்கள். சமீப காலத்து ஆராய்ச்சிகளால் பண்டைக் காலத் துச் சமுதாயப் பிரிவுகளில் புருஷன் மனைவியென்ற உறவு. இல்லையென்றும், பரம்பரையானது தாய்வழியைச் சார்ந்தே இருந்ததென்றும் தெரிவதாக அவர்கள் உறுதியாகச் சொல் கிருர்கள். பெண்பாலரின் உறவுபற்றி ஏற்பட்ட தாய்வழிக் குடும்பமே பூர்விக சமுதாயத்தில் இருந்ததென்பது அவர்கள் கொள்கை. ஆதிகாலத்து மக்களிடம் தாய்வழிக் குடும்பமே எங்கும் பரவியிருந்தது என்பதற்குப் போதுமான ஆதார மில்லையென்று நாம் கூறலாம். மேலும் தாய்க்குரிய உரிமை யென்பது தாயின் ஆட்சி என்றே எப்பொழுதும் பொருள் படவேண்டும் என்ற அவசியம் இல்லை. உதாரணமாக: மலையாளத்து நாயர்களின் கொடிவழியில் தாய் உரிமை தாய் வழியாகவே அமைந்துள்ளது. ஆனல் குடும்பத்தி லுள்ள ஆடவர்களுள் வயசு முதிர்ந்த காரணவனே த்ர வாட்டை நிர்வகித்துப் பரிபாலித்து வருகிருன். அஸ்ாம் தேசத்தில் தாசியென்னும் வகுப்பினருள் பெண்பாலார்