பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15



வேலாயுதத்தின் தலைப்பக்கம் மாமல்லனும், கால் பக்கம் சிந்தாமணியும் உட்கார்ந்திருந்தார்கள். குனிந்த தலை நிமிராமல் இருந்தான் அவன். வழிந்த நீரை வழித்து விடாமல் இருத்தாள் அவள்.


‘அம்மா சிந்தாமணி !”


முதலில் தலை நிமிர்ந்தவன் மாமல்லன். ஆனால் சிந்தாமணியோ சூன்ய வெளியில் கண் பதித்துச் சிலையெனச் சமைந்து விட்டிருந்தாள்.


சிந்தாமணி, என்று கூக்குரலிட்டான் மாமல்லன். அவள் அசையவில்லை.


“சிந்தாமணி,” என்று திரும்பவும் அதட்டினான் அவன்


மீண்டும் பதில் ஏதுமில்லை.


பிறகு, அவளுடைய தோள்பட்டையைத் தொட்டுக்


கூப்பிட்டான். கைகள் நடுங்கின, உடல் நடுங்கியது, உள்ளம் நடுங்கியது.


  • அத்தான்!’


பெண் குரல் எதிரொலி பரப்பியது.


留劲 அப்பா!’


புறப்பட்ட குரல் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தது. தொல் வினைப்பயனின் உலாக் கதை மாதிரி.


அவனுக்குத் திக்குத் திகத்தம் புலனாகவில்லை.


  • சிந்தாமணி!”


அவள் திகைப்புடன் விழி மலர்ந்தாள்.