பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j2


குழப்பம் ஒரு பேய் அது தலை விரித்தாடியது. பேயை விரட்டும் பூசாரியாக வேடம் புனையும் சாகலம் இந்த மனத்திற்கு எப்போதுமே கைகூடி வருமென்று உத்தாரம் சொல்ல இயலாது.


நிகழ்ச்சி ஒன்றின் இதயப் பகுதி அது. அவனது இதயம் அடித்துக் கொண்டது.


மாமல்லனின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற் பட்டிருந்தது. ஒடியாடித் திரிந்து பணிவிடை செய்தான் அவன். டாக்டரின் ஆலோசனைப்படி பத்தியம் வைத்துக் கொடுக்க வேண்டும், காண்டீபனுக்கு வழி காட்ட ஒரு கன்னன் கிடைத்தான். அது புராண காலம் ஆனால் இப்போது மாமல்லனுக்கு உபாயம் கூறக் கூட ஒர் உள்ளம் தட்டுப் படவில்லை. இப்படிப்பட்ட ஏக்கத்தில் அவன் தன்னையே இழந்து விட்டிருந்த தருணத்தில் தான், இன்னன் அனுப்பிய ஆதரவு போலே சிந்தாமணி வந்தாள். ஆவன செய்தாள். படுத்த படுக்கையான கோசலை அம்மாளை, படுக்கையில் அமர்த்தினாள் அந்தப் பெண்; நன்றி தெரிவித்த உள்ளத்திற்கு இது என் கடமை என்ற கண்பாடு பதிலுறுத்தது.


மனித மனம் மெல்ல விழித்தது.


கசிந்தாமணி :


“துறைமுகத்திலே அப்பாவுக்கு அடி பட்டிடுச்சாம் மூட்டை துர்க்கி வருகிறபோது, கால் தடுக்கி விழுந்திட் டாங்க, துடிக்கிறாங்க, வயசுக் காலம் வேறே ... நீங்க தயவு செய்து டாக்டர் யாரையாச்சும் அழைக்கிறீங்களா ?...


ஒலி அலை தேய்வதற்குள், படித்த எம். பி. பி. எஸ். பட்டகேளுடன் நாடிக் குழல், ஊசி வகை, மருந்து முதலியன சுமந்து டாக்டர் ஒருவர் வந்தார்.