பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் இங்கே ஆராய்தல் அவசியம் அன்று. ஆல்ை இந்தக் கொள்கை எத்தகையது என்பதைக் கவனிப்போம். சமூக ஒப்பந்தக் கொள்கைக்கு எதிராகச் சொல்லப்படும் காரணங் . களுள் மறுக்க முடியாதது ஒன்று உண்டு. இது சரித்திர பூர்வமானதன்று என்பதே அக்காரணம். மனிதர் தமக்குள் அமைத்துக்கொண்ட ஒப்பந்தத்தினால் உண்மையில் ೯ಾಕ್ಕೆ அரசு உண்டாயிற்று என்பதற்கு ஏற்ற உதாரணம் ஒன்று கூடச் சரித்திரத்தில் கிடையாது. இந்தக் கொள்கை சட்ட பூர்வமாகப் பொருந்தாது என்பது மற்ருெரு தடை. பூர்விக மனிதர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம் சட்ட பலத்தைப் பெற்றிருக்க முடியாது. ஒப்பந்த உரிமைகளே நிர்ணயிப்ப தற்கு ஏற்ற அரசியல் அதிகாரமோ, சமூகக் கட்டுப்பாடோ அக்காலத்தில் இல்லே. சட்ட பூர்வமாகக் கட்டுப்படுத்தும் வன்மை எப்போது இல்லையோ அப்போது அந்த ஒப்பந்தம் பின்பு வந்த சட்ட பூர்வமான உரிமைகளுக்கும் கட்டுப்பாடு களுக்கும் மூலமென்பது பொருந்தாது. மூன்ருவது தடை வருமாறு : இயற்கையாகவே உரிமைகள் உண்டு என்ற அபிப்பிராயத்தை இக்கொள்கை ஆதாரமாக உடையது. அந்த அபிப்பிராயமே பொய்யானது. இயல்பாக உள்ள உரிமையை அரசியல் உரிமையாகச் சொல்வது பொருங் தாது. சமுதாய அரசல்லாத இயற்கை உரிமை அரசிய லுரிமை ஆகமாட்டாது. அரசியலுரிமை யென்பதில் பிறர் கட்டுப்பட்டுச் செய்யும் உபகாரமும் அடங்கியிருக்கிறது. அது சமுதாய வாழ்க்கையில்தான் இருக்க முடியும். இயற்கை நிலையில் தனி மனிதர்கள் அதிகாரம் உடையவர் களாக இருக்கலாம் ; மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளே உடையவர்களாக இருத்தல் இயலாது. இறுதி யாக, இந்தக் கொள்கையின்படி அரசானது தனி மனிதர் களின் விருப்பத்தின் விளைவாகவும், தனி மனிதர்களுடைய விருப்பத்தின்படி மாறுவதாகவும் அமைவதால், அனுபவத் தில் இது அபாயகரமானது. - ஆயினும் இந்தக் கொள்கையில் சில முக்கியமான உண் மைகள் பொதிந்திருக்கின்றன. அரசாங்கம் ஆலோசித் 8