பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
77



“கொள்ளும் பயனொன் றில்லாக்
    கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்பில்

    எறிந்தென் அழலைத் தீர்வேனே!”

என்று உள்ளே உருகி நைந்தாள் என்ற செய்திகளுடன் அரங்கநாதரைப் பொருத்தமிலி, பெண்ணின் வருத்தமறியாத பெருமான்’ என்று தாய்கூறி வருந்தியதாகக் கோதை வரக் காட்டிய கடிதத்தில் இருந்தது. இங்ங்னம் தாய் கூறியது, ‘நம்திறத்து ஊடல் கொண்டு உவப்பதற்காகவே’ என்று அரங்கநாதர் கருதி, ‘நாம் முப்பத்துமுக்கோடி அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்ப்பது காரணமாகவும், தேவ ரகசியமாகவும் பெரிய மண்டபத்தில் இருந்தோம்; நாம் கோதையல்லது பிறரை விரும்புவதில்லை; நமக்கு உள்ளவாறு பல்லக்கும் குடையும், நாம் பூணும் கண்டமாலே ஆபரணங்களும், பட்டு, பருத்தி, சுகந்த திரவியங்களும் கோதையும் பெற வேண்டும்’ என்று அருளி, அடுக்களைப் புறமாகத் திடியன் ஆன திருவரங்க நல்லூரை ரீரங்கநாதரே அளிப்பதாக அமைந்தது இச்சாசனம்.

இதுகாறும் கூறியவற்றால், கம்பன் இராமனேக் குறித்த ‘சுந்தரவில்லி’ என்ற பெயரையும், ‘உறங்கா வில்லி’ என்று இலக்குவனே நினைவூட்டும் பெயரையும் மக்கள் தம் பெயர்களாகக் கொண்டு மகிழ்ந்தனர் என்பதும், இங்ங்னமும் இராமகாதையைப் பெரிதும் போற்றினர் என்பதும் அறியலாம்.

பிள்ளே உறங்க வில்லிதாசர்

இராமாநுசருடைய சீடர்களில் பிள்ளை உறங்கா வில்லி தாசர் என்பவர் ஒருவர். இவர் மறக்குடியில் தோன்றியவர்; உறையூர்ச் சோழருக்குச் சேவகம் செய்து வந்தவர். இவரது மனைவி பொன்னாச்சி. இவ்வழகியின் அழகில் ஈடுபட்டிருந்தமையை மாற்றி இறைவனது அழகில் ஈடுபட்டு உய்யுமாறு செய்தார் இராமாநுசர். ஒருநாள் நீராடித் தூய்மையுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/84&oldid=1389019" இலிருந்து மீள்விக்கப்பட்டது