பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
69



இழியாக் குலத்தின் இசைஞானிப்

பிராட்டி யாரை என் சிறுபுன்

மொழியாற் புகழ முடியுமோ

முடியா தெவர்க்கும் முடியாதால்.

சுக்தரர் தேவாரத்தில்

சுந்தரர் தம் தேவாரத்தில் மூன்று திருப்பாடல்களில் தம் தாயார் பெயரைக் குறிப்பிட்டிருக்கிருர். அவை பின்

வருமாறு:

(i) (கலயநல்லூர்: தண்புனலும்)

நண்புடைய நன்சடையன் இசைஞானி. சிறுவன்

நாவலர்கோன் ஆரூரன்.........

(ii) (திருவதிகைத் திருவீரட்டானம்)

என்பினையே கலகை அணிந்தானே எங்கள்

எருதேறும் பெருமானே இசைஞானி சிறுவன்

வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்

வன்ருென்டன் ஆரூரன்.........

(iii) (திருத்தொண்டத் தொகை): இசைஞானி காதலன்

திருவாரூர்க் கல்வெட்டு :

திருவாரூர்த் தியாகேசப் பெருமான் திருக்கோயில் இரண் டாம் பிராகாரத்தில் மேற்குப் புறச் சுவரில் இசைஞானியா ரைப்பற்றி ஒரு வடமொழிக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள் ளது. கல்வெட்டு வடமொழிப் பகுதி மட்டும் தென்னிந்திய சாசனங்கள் நான்காம் தொகுதியில் 397.ம் கல்வெட்டாகவும் (No. 73 of 1890), ஏழாம் தொகுதியில் 485-ம் கல்வெட்டின் தொடர்ச்சியாகவும் (269 of 1901) அச்சிடப்பெற்றுள்ளது இக்கல்வெட்டு இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/76&oldid=980746" இலிருந்து மீள்விக்கப்பட்டது