பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94



கெச்சைதனில் ஆடியான் கேதகையொன் ருவனியான்

அச்சமனே யன்றுபுரட் டாசியான் பிச்சை அடர்ந்திட்ட மாமுனிவர் ஆச்சிரமந் தோறும் படர்ந்திட்ட மையற் பசியான் கொடுங் கூற்(று) எடுக்கைக்கு வந்து பிறந்(து) எங்காத் திகையான் கடுக்கைத் தொடைமார் கழியான்-பொடிச்சுதை என் வன்னி வளர்க்கும்சோ மாசியான் வஞ்சகமே பன்னுமவர் நெஞ்சத்தற் பங்குனியான்-நன்னிரால் தீவணத்தங் குஞ்சித் திரையான் சிறுவனேயாள் காவணத்தில் ஏளுேர்வை காசியான்-மூவரை விட்டு அப்புரத்தா னுர்க்கும் அளித்த உயிர் ஆனியான்'

'ஆடியான்’ என்பது நடனம் ஆடியவன்' என்று பொருள்படும்; ஆடி என்பது தொனி.

கேதகை ஒன்ருவனியான்’ என்பது தாழையை ஒரு பொருளாக (மதித்து) அணியாதவன்” என்று பொருள்படும். ஆவணி என்பது தொனி.

சமனே அன்று புரட்டு ஆசியான்’ என்பது 'யமனை அன்று புரட்டிய போரையுடையவன்; (ஆசி-போர்) என்று பொருள்படும்; புரட்டாசி என்பது தொனி.

இட்ட மையல் ப சியான்’ என்பது மையலாகிய பசியை யிட்டவன்’ என்று பொருள்படும் அற்பசி (ஐப்பசி) என்பது தொனி,

"ஏங்காத்திகையான்' என்பது ஏங்கித் திகைக்கமாட் டான்' என்று பொருள்படும்; கார்த்திகை என்பது தொனி.

‘கடுக்கைத் தொடை மார்கழியான்’ என்பது கொன்றை மாலையை மார்பினின்று நீங்கான்’ என்று பொருள்படும். மார்கழி என்பது தொனி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/101&oldid=980868" இலிருந்து மீள்விக்கப்பட்டது