பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு 81

சோதி மணிமுடித் தாமமும்

நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத்

தானுக்கு' (தாள்.கால்; அற-அற்றுவிழும்படி, அண்டம் உலகம்; பொன்கோயில்-அழகிய கோயில்; போனகம்-திருவமுது; தாமம்-மாலை; நாமம்.சண்டேசுரர் என்ற திருப்பெயர்; நாயகம்-முதன்மை; பாதம்-பெரும் பாவச் செயல்; பரிசுவெகுமதி.} என்றும் சேந்தனார் புகழ்ந்துரைப்பதைக் காணலாம். அங்ங்னமே, இலங்கை பாழாகப் பொருத திருமாலின் வெற்றிச் செயலை நினைந்து 'இராக்கதர் வாழ் இலங்கை பாழாகப் பொருதான்' என்றும், பொதுவாக அரக் கர்களை அழித்த செயலை நினைந்து அசுரர் இராகி கதரை இண்டக்குலத்தை எடுத்துக் களைந்த இருடி கேசன்" என்றும், நரசிம்ம மூர்த்தியாகத் தோன்றி. இரணியனை அழித்து அவன் சிறுக்கன் பிரகலாதனுக்கு அருளிய செயலைக் குறிப்பிடும் முறையில்,

'அந்தி யம்போதில் அரியுரு

வாகி அரியை அழித்தவன்’** (அந்தியம்போது-பகலவன் மறையும் நேரம்; அரி.

சிங்கம்; அரியை-பகைவனை) - என்றும், வானாசுரனின் ஆயிரம் தோள்களையும் அறுத் துத் தள்ளிய செயலைப் பாராட்டும் முறையில்,

14. சேந்தனார்.19

15. பெரியாழ்வார்-;

16. பெரியாழ்வார்.3 இன்டக்குலம் . நெருக்கமான கூட்டம்; இருடீகேசன்-இந்திரியங்களை அடக்கின §#ಣ:57

17. பெரியாழ்வார்-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/83&oldid=534102" இலிருந்து மீள்விக்கப்பட்டது