பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தி நெறி

117

[அனைந்த-பற்றிக் கிடக்கும்; வினை-பழவினை; அல்லல்-மனத்துன்பம்; பாவம்-இப்போது செய்யும் பாவம்; மிடைந்தவை-(ஆன்மாவை) மூடிக்கிடக்கின்றவை; மீண்டு. நீங்க; நுடங்கு இடையை-மெல்லிய இடையையுடைய சீதாப்பிராட்டியை.]

வினை, நோய், பாவம் இவை வாசனையோடு நீங்க வேண்டுமாயின் சக்கர்வர்த்தித் திருமகனைச் சரணம் புகுதலே வழியாகும் என்ற குறிப்பினை இப்பாசுரத்தில் காணலாம்.

“வீடாக்கும் பெற்றி
   யறியாது மெய்வருத்திக்
கூடாக்கி நின்றுண்டு
   கொண்டுழல்வீர்!-வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத
   முதற்பொருள்தான் விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா

   யணன்.”[1]

[வீடு-மோட்சம்; பெற்றி-உபாயம், வழி; கூடு-எலும்புக் கூடு; உழல்வீர்-திரிகின்றவர்களே, மெய்ப்பொருள்-இறைவன்; விண்ணவர்-நித்திய சூரிகள்]

என்ற பாசுரத்தில் திருமழிசையாழ்வார் எம்பெருமானைச் சித்தோபாயமாகக் காட்டுவதைக் காணலாம். பரமபத நாதனையே சரணமடைந்து உய்ந்து போகலாம் என்று குறிப்பிடுவதையும் உணரலாம். இதே ஆழ்வார் பிறிதோர் இடத்தில்,

“அடைக்கலம் புகுந்த என்னை

  ‘அஞ்சல்’ என்ன வேண்டுமே.”[2]

[அஞ்சல்-பயப்படாதே]


  1. 23. நான்முகன் திரு-13
  2. 24. திருசந்த விருத்தம்-92