பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழுகையும் ஆன்மிக வாழ்வும் #3?

போலும் உரு; அணியழி தோற்றம்-பொளிவற்ற காட்சி; கடித்தனம்-தவிர்ந்தோம்; செலவு-பயணம்.

என்ற பாடற்பகுதி இதனை விளக்குகின்றது. தலைவியின் அழுகையை அடக்கும் முயற்சியாலேயே தலைவன் தன் பயணத்தை நிறுத்திக்கொள்கின்றான்; தலைவியும் தன் கருத்தினை நிறைவேற்றிக்கொள்கின்றாள். அறுபதினா பிரம் ஆண்டு அரசாண்டு பெரும்புகழ் எய்திய தசரதனிடம் கைகேயி அழுதே தன் எண்ணத்தினை முற்றுவித்துக் கொள்ளும் செயலைக் கம்பநாடன் காட்டுவதை நாம் நன்கு அறிவோம். மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான்’ கைகேயியின் அழுகைக்குத் தோற்றுவிடுவதைக் காண்கின்றோம். இங்ஙனம் உலக வாழ்வில் அழுகை' புரியும் அற்புதத்தை அன்றாட நிகழ்ச்சிகளாலும், கவிஞர்கள் சித்திரித்துக்காட்டும் நிகழ்ச்சிகளாலும் அறி கின்றோம்.

இங்ஙனம் உலக வாழ்க்கைக்குப் பெருந்துணையாக இருக்கும் அழுகை ஆன்மிக வாழ்க்கைக்கும் பெருவழியாக அமைவதை அருட்பெருஞ்செல்வர்கள் நமக்குக் காட்டி யுள்ளனர். நூல் வழியாகக் கற்றுணர்ந்த உண்மைகளும் ஆன்ம நெறியில் உய்ப்பதற்குத் தவறும்பொழுது இந்த அழுகை கைகொடுத்து உதவுவதை விளக்கியுள்ளனர். அழுகையின் உறைப்பிற்கேற்ப ஆண்டவன் மேல் தம் பேரவா இருப்பதைப் புலப்படுத்தியுள்ளனர். ஆழ்வார்கன் அருளியுள்ள திருப்பாசுரங்களிலும், நாயன்மார்கள் திருவாய் மலர்ந்துள்ள திருப்பாடல்களிலும் இதற்குச் சான்றுகளைக் காணலாம்.

மணிவாசகப் பெருமான்,

உள்ளத்தாள் நின்றுச்சி அளவும் நெஞ்சாய்

உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா