பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அறிவியல் தமிழ்

லால் அந்நாமம், இம்மையே எழுமை நோய்க்கும் மருந்து’ எனக் குறிப்பிடப் பெற்றது. முக்தி பெற்றவர்க்கு வினைவயமான பிறப்பு இல்லை என்பது வைணவ சமயத்தின் கொள்கை.

சாணாகதித்வம், கைங்கரியம் : இராமகாதைய்ைச் சரணாகதி தத்துவத்தை விளக்கவந்த காவியம் என்பர் மேய்ப்பொருளறிஞர்கள்; இதனைச் சரணாகதி வேதம் என்றே கொள்வர்.” அபயம் அடைந்த சுக்ரீவனும் வீடணனும் எங்ங்ணம் காக்கப் பெறுகின்றனர் என் பதைக் காவியம் பலவாறாக விளக்குகின்றது. இவர் கள் இருவரும் இராம கைங்கரியத்தில் மிகவும் ஈடுபட்டுப் பணியாற்றுவதையும் காணலாம். சரணாகதித்வம், கைங்கரியம் என்ற இரண்டுமே வைணவ சமயத்தின் முக்கியமான கொள்கைகளாகும்.

' 'அகலகில்லேன் இறையும் என்று

அலர்மேல் மங்கை உறைமார்பாl

事 率 术

புகல் ஒன்று இல்லா அடியேன் உன்

அடிக்கிழ் அமர்ந்து புகுந்தேனே' என்பதனால் சரணாகதித்வமும்,

'ஒழிவுஇல் காலம்எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை

செய்யவேண் டும்தாம் தெழிகுரல் அருவித்

திருவேங் கடத்து

69. Srinivasachari P. N. : The Philosophy of Visistadvaita-p. 395

70. திருவாய் 6, 19 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/72&oldid=534091" இலிருந்து மீள்விக்கப்பட்டது