பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் கண்ட அறிவியல் 123

அல்லாறு வரையறுத்து வைத்திருந்து அவை அழித்த பட்டிருத்தலும் கூடும். கடல் கோள், இக்கோள் முதலிய இயற்கை தியதிகட்கு அவை இரையாயிருத்தலும் கூடும். அஃது எங்கனமாயினும் அவர்கள் இத்துறைகளில் வல்லுநர்களாயிருந்தனர் என்பது மட்டிலும் 發@蒸線@。

பண்டைய அறிவியலறிஞர்கள் : உறையூர் முதுக் கண்ணன் சாத்தனார் என்ற புலவர் அறிவியல் அறிஞர்கள் அக்காலத்தின் திகழ்ந்தனர் என்பதை ,

செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந்து அறிந்தோர் போல என்றும் இனைத்து என்போரு முனரே."

என்று குறிப்பிடுகின்றார். 'செஞ்ஞாயிற்றினது விதி யும் அஞ் ஞாயிற்றினது இயக்கமும் அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும், காற்றியங்கும் திக்கும் ஒர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப் பெற்ற இவற்றை ஆண் டான்டு போய் அளந்தறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை யுடையனவென்று சொல்லும் கல்வி புடையோடும் உளர்" என்ற புலவர் கூற்றில் இத்தகைய அறிஞர்கள் இருந்தமை பெறப்படுகின்றது. .

வானநூலறிவு : பண்டையோர் வானநூல் துறையில் அறிவுமிக்கு விளங்கினர் என்பதைப் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களால் அறியலாம். விண்ணில் மதி

1. புறம்-30 அடி (1-1)