பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட மெய்ப்பொருள் 51

உடம்பு, உயிர் ஆகிய இரண்டையும் தனக்கு உடம்பாகக் கொண்டுள்ளான். இவ்வாறு இம் மூன்று தத்துவங்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் எக் காலத்தும் தத்தம் இயல்பையும் விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பது வைணவ சமயக் கொள்கையாகும்.

மேலும், வைணவ சமயக் கருத்துப்படி கடவுளுக்கு உருவம் உண்டு. அது திவ்வியமங்கள விக்கிரகம் எனப்படும். பர, வியூக, விபவ (அவதாரம்), அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து வகையாக அது இருக்கும். இராமகாதை அவதாரமாகிய மூன்றாவது நிலையினைக் கூறுவது" இறைவன் தன்னை அடைந்தவர்களைக் காப்பதற்காகவும், அவர்களது விரோதிகளைப் போக்குவதற்காகவும், வைதிக தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் தன் இச்சையின் காரணமாக அவதரிக்கின்றான். இராமா வதாரம் அத்தகைய எண்ணற்ற அவதாரங்களுள் ஒன்று. இறைவனுக்கு எண்ணற்ற பெயர்கள் உண்டு, அவனது மங்கள குணங்களை அளவிட்டு உரைக்க முடியாது. இறைவனே இவ்வுலகத்தைப் படைத்தற்கும், அளிப் பதற்கும், அழிப்பதற்கும் முதற் காரணமாவான். இச் செயல்களை அவன்விளையாட்டாகவே நிறைவேற்றுவான்."

நாராயணனே இராமன்: பரமபத தாதனாகிய நாராய ணனே இராமனாக அவதரித்தான் என்ற செய்தியைக் கம்பநாடன் காவியத்தில் பல இடங்களில் பெற வைக் கின்றான். இராமனது அவதாரத்தைக் கூறும் சவிஞன்,

"ஒருபகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்(து) அருமறைக்கு உணர்வரும் அவனை அஞ்சனக்

4. இவை பற்றிய விவரங்களை தத்துவத் திசயம் என்ற நூலில் காண்க. ஈசுவர பிரகரணம் சூத்திரம் 42 to 59),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/53&oldid=534072" இலிருந்து மீள்விக்கப்பட்டது