பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அறிவியல் தமிழ்

செல்லும் வழியாகிய வட்டத்தை இருபத்தேழு பிரிவு களாகப் பிரித்து அப்பிரிவுகனை அறிந்து கொள்ளும் அடையாளமாக 'எறிகடல் ஏழின் மணல் அளவாக" வுள்ள விண்மீண்களில் இருபத்தேழு விண்மீண் தொகுதி களைக் குறித்து அமைத்தனர் பண்டைய அறிஞர்கள். புறநானூற்றில் 'மதிசேர் நாண்மீன்போல்” என வரும் சொற்றொடருக்கு உரையாசிரியர் திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனை ஒப்ப எனக் கூறும் உரையால் இதனை அறியலாம். கோள்களின் இயக்கத்தால் இயற்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். வெள்ளி என்பது ஒரு மழைக்கோள், இது தற்கே விலகியிருப்பது மழை இல்லாமைக்கு அறிகுறி யாகும் என்பதை,

"வெள்ளி தென்புலத் துறைய விளைவயல்

பள்ளம் வாடிய பயனில் காலை' என்ற மள்ளனார் பாட்டின் பகுதி சுட்டுகின்றது. இதைப் போலவே வால்வெள்ளி தோன்றுவதும், சனி மீன் புகைவதும், எரி கொள்ளி வீழ்தலும் தீக் குறிகளாகக் கொள்ளப் பெற்றிருந்தன. இவற்றை, .

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்

தென்திசை மருங்கில் வெள்ளி ஓடினும் வயலகம் நிறையப் புதற்கு மலர்' |மைம்மீன்-சனி :துரமம்-வால்மீன்.) என்ற பாட்டின் பகுதியால் அறியலாம். இவற்றின் 'சனி கரிய நிறமுடையனாதலின் மைம்மீன் என்றார்; சனி புகைதலாவது இடபம், சிங்கம், மீனம் இவற்றோடு மாறுபடுதல்; இவற்றுள் சனி தனக்குப் பகைவீடாகிய சிங்க

2. 4. புறம்-388 அடி (1-2) 3. புறம்-160. அடி. 5. புறம்-161 அடி(1-3)