பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் ஆன்ம வேட்கை 147

நீன்ட நாட்களாகவே இறைவனுக்கு 'ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்" என்பதையே திருவருள செய்கையாகத் திருவுள்ளம் பற்றியிருந்தார் ஆழ்வார். இதனையே ஒரு பற்றாகக் கொண்டு தன்னுடைய சீல் குணத்தால் ஆழ்வாரின் நெஞ்சத்தை வஞ்சித்துப் புகுந்து அவரை ஆடகொள்ளுகின்றான் இறைவன், இதனை ஆழ்வார்,

"நீர்மையால் நெஞ்சம்

வஞ்சித்துப் புகுந்து,என்னை

சர்மைசெய்(து) என் உயிர்

ஆய்என உயிர் உண்டான்'

{நீர்மை சில குணம் ; որոա செய்த-இரு பிளவாக்கி;

என்று கூறுவர். ‘வஞ்சித்து நெஞ்சம் புகுந்து என்னை நீர்மையால் ஈச்மை செய்து என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்வது சுவை மிக்கது. தான் ஆண்டானும் தான் அடிமையுமான முறை தவறாது பரிமாறுவதாகவே' சொல் லி என் நெஞ்சை இசையப்பண்ணி உள் புகுந்தான் என்கின்றார் ஆழ்வார். தான் அடிமை, நான் ஆண்டான்' என்று முறைகேடாகப் பரிமாறப் போவதாக முன்னமே தெரிவித்து விட்டால் ஒருகால் ஆழ்வார் இசையாது போயினும் போவர் என்று கருதியே இங்ஙனம் வஞ்சித்து: (ஒன்றைச் சொல்லி மற்றொன்றைச் செய்து) உள் புகுந் தான் போலும்! இங்ங்ணம் புகுந் தவனுடைய கள்வத்தை'த் தன்னால் அறியக் கூடவில்லையே என்கின்றார் ஆழ்வார். இங்ங்ணம் புகுந்த பிறகு தன் நீர்மையைக் காட்டத் தொடங்குகின்றான்; தான் தாழ நின்று பரிமாறவும் தொடங்குகின்றான். அதனால் ஆ ழ் வாசி ன் நெஞ்சை ஈடு படுத்துகின்றான். இங்ங்ணம் ஈடுபடுத்திலவன் இவரை

SHSAS A SAS SSAS SSAAAASSSSLLSSS TASAS SSAS SSAS

3. திருவாய் 33: 4. திருவாய் 9.6:3