பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறைவனின் ஆன்ம வேட்கை

153


[ஆர்வு-ஆசை; பாரித்து எண்ணி; கடியவன்-பதற்ற முடையவன்.]

என்பது பாசுரம். இறைவனைக் கண்டால் அப்படியே விழுங்கிவிடுவதாக ஆசைப்பட்டிருந்தார் ஆழ்வார்; ஆனால் இப்படிச் செய்யவேண்டுமென்று தனக்கு முன்பே இறைவன் எண்ணித்தன்னை அடியோடு பருகிவிட்டான். ஆழ்வாருக்கு இறைவன் “உண்ணும் சோறு பருகும் நீர்”[1] என்னலாம்படி இருந்தான். அங்ஙனமே இறைவனுக்கும் ஆழ்வார் 'உண்ணும் சோறு பருகுக் நீர்” என்று ஆகிவிட்டார். திருவாய்மொழி ஆயிரத்திலும் இப்பாசுரம் உயிரானது என்பது வைணவர்களின் திருவுள்ளம். இங்ஙனம் இறைவனது ஆன்மவேட்கையைப் பக்திப் பனுவல்களில் கண்டு மகிழலாம்.

——————

  1. திருவாய் 6.7:1
அ.த-10