பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அறிவியல் தமிழ்

மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த கோலமே யார்க்கும் தெரிவரிய கொள் கைத்தால் ஆலமோ? ஆலின் அடையோ? அடைக்கிடந்த பாலனோ? ஆதிப் பரமனோ? பகராயே' என்று இராமன் முதற்பொருள் என்று கூறுவதைக் காண்க. மேலும், விராதன் வாய்மொழியாக,

"மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள் உய்யத்தான் ஆகாதோ?

உனக்கென்ன குறையுண்டோ? வையத்தார் வானத்தார்

மழுவாளிக்கு அன்றளித்த ஐயத்தால் சிறிது ஐயம்

தவிர்ந்தாரும் உளர் ஐயா.'" (மெய்-நீயே பரத்துவம் என்னும் உண்மை; மழுவாளி. பரமசிவன்; ஐயம்-பிச்சை, சந்தேகம்.) என்று பின்னும் கூறுவன். இக்கருத்து நம்மாழ்வாரின்

"பேசநின்ற சிவனுக்கும் பிரமன்

தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே; கபாலதல்

மோக்கத்துக் கண்டுகொண்மின்' என்றப் பாசுரப் பகுதியின் கருத்துடன் இயைந்திருத்தல் கண்டு மகிழத்தக்கது. மேலும், கம்பநாடன் திருமால் அன்னமாய் இருந்து அருமறைகள் உரைத்ததைக் குறிப்பிடும் ஆழ்வார்களின் பாசுரங்களை நினைந்து,

27. ஆரணி-கவந்த-44,

28. ஆரணி-விராதன் வதை-59 29. திருவாய் 4.10:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/60&oldid=534079" இலிருந்து மீள்விக்கப்பட்டது