பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அறிவியல் தமிழ்

என்று இக் கருத்தை மேலும் வற்புறுத்துவன். இராமன் கோலம் புனை தலைக் கூறும் இடத்தில் இராமனைக் கவிஞன்,

'முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை என்று குறிப்பிடுவன். முடிசூடப் போகும் இராமனின் திருமேனியைக் (திவ்வியமங்கள விக்கிரகத்தைக்) கண்டு ஊரார் வாய்மொழியாக,

    • 器缀

'காலம்ஆ கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற மூலமாய் முடிவி லாத

மூர்த்திஇம் முனிவன் என்பார்" என்றும் அவனது 'ஆதி அம் சோதி உருவைச் சுட்டிக் காட்டுவன்.

உலகத் தோற் றத்திற்கு முதற் காரணன்: நாராயணனே உலகத்திற்கு முதற்காரணன்' என்ற வைணவ சமயக் கருத்தைக் கவிஞன் கவந்தன் வாய்மொழியாக,

'நிற்கு நெடுநீத்த நீரின் முளைத்தெழுந்த மொக்குளே போலமுளைத்தெழுந்த அண்டங்கள் ஒக்கவுயர்ந் துனுளே தோன்றி ஒளிக்கின்ற பக்கம் அறிதற்கு எளிதோ பரம்பரனே."

(நீர்.ஆவரண நீர்; மொக்குள்-நீர்க்குமிழிகள்; பக்கம். தன்மை; பரம்பரன்- மிகச் சிறந்தவன்) . என்று கூறுவன். மெய்யறிவு தோன்றப்பெற்ற விராகன் புகழ் மொழியாக,

35. பால. கடிமண்ப்-69 36. அயோத். கைகேயி சூழ்வினை.91 37. தத்துவத்திரயம் ஈசுவரப் பிரகரணம்-12 38. ஆரணி, கவத். 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/62&oldid=534081" இலிருந்து மீள்விக்கப்பட்டது