பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

அறிவியல் தமிழ்

அடிமை செய்வதற்குப்[1] பதறிப் பலகாலும் பிரபத்தி பண்ணுகின்ற அளவில், பல இடங்களிலும் அர்ச்சாவதாரத்தில்தான் பிரயத்தி செய்தனர் என்பதை மேலே கண்டோம்.

“ஆழ்வார்கள் பலவிடங்களிலும் பிரபத்திபன்

ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே”[2]

என்பது ஶ்ரீவசன பூஷண வாக்கியம். முமுட்சுப்படியிலும்,

இதுதான் (அர்ச்சாவதாரம்) பர வியூக விபவங்கள்

போலன்றிக் கண்ணாலே காணலாம்படி இருக்கும்.”[3]

என்று இந்த அவதாரத்தின் எளிமை பேசப்பெறுகின்றது. உபாயமாகப் பற்றுமிடத்தில் வேண்டப் பெருங் குணங்கள் வாத்சல்யம், சுவாமித்துவம், செளசீல்யம், செளலப்பியம் ஆகியவை. இவற்றுள் வாத்சல்யம் என்பது, கன்றினிடத்தில் பசு இருக்கும் இருப்பு. சுவாமித்துவம் என்பது உடையவனாயிருக்கும் இயல்பு, செளசீல்யம் என்பது, உயர்ந்தவன் தாழ்ந்தவனோடு புரையறக் கலக்கை. செளலப்பியம் என்பது, எளியனாயிருக்கும் இருப்பு. இத்தத் திருக் குணங்கள் “இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது இங்கே” [4]என்று குறிப்பிடுகின்றது.ஶ்ரீவசன பூஷணம். இதனால்தான் பிரபந்நர்களின் தலைவரான தம்மாழ்வார் அர்ச்சாவதாரங்களில் இன்று மிகப் பெரும் புகழுடன் திகழும் திருவேங்கட முடையானிடம் சரண் புகுந்தார்.

‘அகல கில்லேன் இறையும்’ என்று
  அலர்மேல் மங்கை உறைமார்பா:
நிகரில் புகழாய்! உலகம் மூன்று

  உடையாய்! என்னை ஆள்வானே!

  1. 33. திருவாய். 3.3:1
  2. 34. ரீவசனபூஷணம்-38.
  3. 35. முமுட்கப்படி-140
  4. . 36. நீவசன பூஷணம்-40, இங்கேஅர்ச்சாவதாரத்தில்,