பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இறைவனின் ஆன்ம வேட்கை"

ஈசுவர இலாபம் உயிர்கட்குக் குறிக்கோளா? அல்லது உயிர்களின் இலாபம் ஈசுவரனுக்குக் குறிக்கோளா? என்ற ஆராய்ச்சி வைணவ பக்தர்களிடம் நடைபெறு வது உண்டு. உயிர்களின் இலாபந்தான் ஈசுவரனுக்குக் குறிக்கோள் என்பதுவே வைணவ சித்தாந்தம். எம் பெருமான் தன் படைப்பினாலும் அவதாரங்களினாலும் ஆன்மப் பயிர்த் தொழில் செய்வதெல்லாம் ஒர் ஆருயிர் தனக்குக் கிடைக்கும் என்ற நப்பாசையினாலன்றோ? * எல்லாம் வாசுதேவன்' என்று திருவுள்ளங் கொண்டுள்ள ஒரு மகாத்மா எனக்குக் கிடைக்கவில்லை" என்றன்றோ சொல்லுகின்றான் கண்ணன்? பாடுபட்டுத் தேடிப் பார்த்தும் கிடைக்காததனால் வருத்தத்துடன் வெளிப் படும் கூற்று இது என்று நாம் அறிகின்றோமன்றோ? இங்ங்னம் ஆன்மப் பயிர்த்தொழில் புரியும் இறைவனின் ஆன்ம வேட்கையை ஒரு திருவாய்மொழியில் பேசி இனியராகின்றார் ந ம் மா ழ் வார். எம்பெருமான் தன்னுடைய உள்ளத்தில் வீற்றிருந்த பெருமையை,

"சிறியே னுடைசிந்தை புள்மு உலகும் தம் நெறியா வயிற்றிற்கொண்டு

நின்றொழிந் தாரே'

என்று இறைவன் பாரித்து முறை கெடப் பரிமாறின பரிமாற்றத்தை அநுபவித்தவரன்றோ ஆழ்வார்?

  • பண்ணாராய்ச்சி வித்தகர் திரு. சுந்தரேசனார் மணி

விழா மலரில் (915) வெளிவநதது. 1. பகவத் கீதை 7:9 2. திருவாய் 8.7:8