பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அறிவியல் தமிழ்

தாய்,ஒர் அடியாம் எல்லா உலகும் தடவந்த மாயோன்! உன்னைக் காண்டான்

வருந்தி, எனைநாளும் யோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?”

(பாய்வைத்து-பரப்பிவைத்து: தாய்-தாவிஅளத்து; தடவந்த ஆக்கிரமித்த: -

என்று கூறுவர். முன்னிரண்டு அடிகளின் கருத்தை ஆறாயிரப்படியில் என்னை உன் திருவடிகளிலே சேர்க்க வேணுமென்று உலகத்தை அளக்கும் செயலை வியாஜமாகக் கொண்டு விலையில்லாதொரு இரத்தினம் கொடுத்துத் தேடுவாரைப் போல பெரிய வருத்தத்தோடே உன் திருவடியாலே என்னைத் தேடிக்கொண்டு திரிந்த உன்னை’ என்று பிள்ளான் அருளிச் செய்துள்ளார். நீ என்னைத் தேடித் திரிந்த காலத்தில் உனக்கு நான் அகப்பட்டேன் இல்லை; உன்னை நான் தேடிக் கிரியும் இக்காலத்தில் எனக்கு நீ அகப்படுகின்றாய் இல்லை என்று ஆழ்வார் கூறுவது போல் உள்ளது. -

இங்ங்ணம் ஆழ்வார் திருநகரில் திருப்புளியாழ்வார் நிழலிலிருந்துகொண்டு அழலிவிட்ட மெழுகென உருகி ஆண்டவனை அழு அழுத கூவியழைப்பதே இவர் அருளிய திருவாய்மொழி. இவருடைய திருக்குரல் சிந்தை செல்லாச் சேணெந்ேதுாரத்திலுள்ள அந்தமில் இன்பத்து அழிவில் வீடாகிய பரமபதத்திலும் ஒலிக்கும் என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. இந்த அழுகைக் குரலைக் கேட்ட பரமபதநாதன் ஆழ்வாருக்குத் தன் திருவடிப்பேற்றை அருளினான் என்பதை அவா அந்து வீடு பெற்ற குருகர்ச்

13. திருவாய், 5.9:8