பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் ஆன்ம வேட்கை 149

என்றமுமுட்சுப்படியின் மகாவாக்கியத்தின் கருத்தும் சிந்திக் கற்பாலது. அஃதாவது, ஈசுவரன் சீவனாகிய தன்னுடன் கலந்து பரிமாறும்போது, அவன் தன் மாட்டுக் கொண்டுள்ள பிரேமப் பித்தினால் (சழிபெருங் காதலினால்) தாழ நின்று பரிமாறி, தன்னுடைய சேஷத்துவத்தை (அடிமைத் தன்மையை) அழிக்குங்கால், 'நம சேஷத்துவத்தை நாம் நோக்கிக்கொள்ள வேண்டும்’ என நினைத்துச் சீவனாகிய தான் பின்வாங்கி அவன் போகத்தைக் கெடுக்காம விருத்தல் வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது தான் பகவானுக்கே ஆனந்தம் ஏற்படுமாறு வினியோகப் படுகை என்று சொல்லப்படுவது.

ஈசுவரன் சேதனனை (உயிரை) வினியோகம் செய்து கொள்ளல் இரண்டு வகைப்படும்; இவற்றுள் அவன் தலைவனாகவே இருந்து உயிரை அடிமையாக வைத்துப் பரிமாறுதல் ஒரு வகை, சில சமயம் அவன் உயிருடன் கலந்து போகம் துய்க்கக் கருதுவான். அவ்வமயம் ஈசுவரன் உயிரை அடிமை கொள்பவன் போன்று, உயிரை நெருங்கி, அதன்மாட்டுத் தனக்குள்ள வேட்கை மிகுதியால், உயிரைத் தலைமையாக வைத்துத் தான் அடிமையாக இருந்து, இழிதொழில் செய்து, அவ்விதத்தில் உயிரை வினியோகம் கொள்ளுதல் மற்றொரு வகை. சண்டுக் கூறிய இரண்டாவது வகை அதுபவத்திற்குக் குசேலரின் வாழ்க்கை வரலாற்றின் நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். பரம பக்தராகிய குசேலர் தன் துணைவியின் துண்டுதலால் கண்ணனிடம் செல்லு கின்றார். குசேலரின் வருகையைக் காவலரால் அறிந்த துவரைநாதன் தானே அரியணையினின்றும் இறங்கிவந்து,

'திலகமண் தோய ஐயன்

திருவடி வணங்கிப் பின்னர்