பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அழுகையும் ஆன்மீக வாழ்வும்:

பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. அஃது அழுதால் தான் மக்கட்பேறு பெற்றவர்கட்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். மக்கட்பேறு நேரிட்ட இல்லங்கட்கு விசாரிக்க வரும் உறவினர்கள், அன்பர்கள், குழந்தை அழுததா? என்று கேட்பதை நாம் நன்கு அறிவோம். இதன் பொருள் என்ன? சிதள அலமாரியைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்த நிலையிலுள்ளதாயின் கருவறையில் எல்லா நலன் களும் பெற்றுப் பத்துத் திங்கள் பாங்குடன் வளர்ந்துவந்த குழந்தை புதியதோர் உலகிற்கு-இந்தக் கர்மபூமிக்குவருகின்றது. தாயின் கருவறைக்குள் இருக்கும்போது அதற்கு வேண்டிய உண்ணும் சோறு, பருகும் நீர் முதலிய அனைத்தையும் அன்னையிடமிருந்தே பெற்றுவிடுகின்றது. அங்கு அதற்கு ஒரு குறையும் இல்லை. இங்கனம் செல்வக் களஞ்சியம்போல் சேம அறையில் எல்லாப் பாதுகாப்புடன் இருக்கும் குழந்தை, தானே அனைத்தையும் தேடிக்கொள்ள வேண்டிய புதிய உலகிற்கு வருங்கால் அழாமல் என்ன செய்யும்? இந்த அழுகை மொழிதான் குழந்தை தானாகக் கற்றுக்கொண்ட ஒரே மொழியாகும். இந்த ஒரே மொழியைக் கொண்டே குழந்தை தன் பெற்றோரிட மிருந்து சில திங்கள் காலம் அனைத்தையும் பெற்று வாழ்ந்து வளர்கின்றது.

பேருந்து ஒட்டுநர் ஒலிப்பானைக் (Horn) கொண்டு பல்வேறு கருத்துகளைப் புலப்படுத்துவதைச் சாலை

  • பெங்களுர்த் தமிழ்ச் சங்க வெள்ளி விழா மலரில் (1974) வெளிவந்தது. §