பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி தெறி }}}

திகரில் அமரர் முனிக்கனங்கள்

விரும்பும் திருவேங் க.த்தானே! புகல் ஒன்று இல்லா அடியேன் உன்

அடிக்கீழ் அமர்ந்து புகுத்தேனே."

இறை-மிகச் சிறிய காலம்)

மேற்குறிப்பிட்ட நான்கு திருக் குணங்களும் இறைவனைப் பற்றுகைக்குத் துணை செய்த நிலையின் விளக்கத்தை இப் பாசுரத்தில் காணலாம். நீகரில் புகழாய்' என்பதனால் 'வாத்சல்யம்' என்ற திருக்குனமும், உலக மூன்றுடையாய்' என்பதனால் 'கவாமித்துவம்’ என்ற பெருங்குணமும், ‘என்னையாள்வானே" என்பதனால் செளசீல்யம்' என்ற மேன்மைக் குணமும், திருவேங்கடத் தானே' என்பதனால் சேதநன் தன் கண்களால் கண்டு பற்றுகைக்கு எளியனாக இருக்கும் செளலப்பியம் என்ற உயர்ந்த குணமும் விளக்கம் பெறுவதாக ஆன்றோர்கள் அருளிச் செப் துள்ளனர். இங்ங்னம், பிரபத்தி நெறியினைத் தெளிவாக எடுத்துரைத்து வற்புறுத்துவன ஆழ்வாரின் பாசுரங்கள், இவற்றைப் படித்துப் பயன் பெற்றுய்வது நம்மனோரின் தலையாய கடன்.

"செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய ஒதித்

தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே."

(மறைநிலங்கள்.வேதபாகங்கள்)

37. திருவாய்.-6, 10:10, 38. தேசிகப் பிரபந்தம்-40, அ.தி-8