பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தமிழ் இலக்கியம் கண்ட அறிவியல்

பன்னெடுங் காலமாகவே தமிழர்கள் நாகரிகத்தில் சிறப்புற்று விளங்கினர் என்பது வரலாற்று அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. அறிவியற் கலைகள் அவர் களிடம் பயன் முறைக் கலைகளாக மிளிர்ந்தன என் பதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. இன்று மேனாட்டார் சயன்ஸ்' (Science) என்று குறிப்பதைத் தான் நாம் அறிவியல் என்று வழங்குகின்றோம். சயன்ஸ்’ என்ற சொல் அறிவு (Knowledge) எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லினின்றும் தோன்றியது. மனிதன் வாழும் சூழ்நிலை, சுற்றியுள்ள உலகம், பிற அண்டங்கள் முதலிய வற்றின் தன்மைகளைத்தான் அறிவியற் கலைகள் உணர்த்துகின்றன. பண்டைத் தமிழர்கள் இன்று இருப்பன போன்ற அறிவியல் துறைகளைத் தனித்தனிக் கலைகளாக வளர்த்து வைத்திருந்தனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லாது போயினும், அவர்கள் இக் கலைகளைப்பற்றி ஒரளவு அறிந்திருந்தனர் என்பதற்கும், இவை அவர்களது. வாழ்வில் பயன் முறை அறிவியல் துறைகளாக (Applied கaiences) மிளிர்ந்தன என்பதற்கும் பல்வேறு இலக்கியச் சான்றுகள் உள்ளன. இவற்றை ஈண்டுக் காண்போம்.

பண்டைத் தமிழர்கள் வானநூல், உயிரியல், இயற் பியல், (Physics)பொறியியல்முதலியபல்வேறுதுறைகளிலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. என்ன காரணத்தாலோ அவர்கள் இன்றுள்ளனபோல் அத் துறைகளைத் தனித்தனியாக வரையறை செய்து பாதுகாக்க வில்லை. ஒருகால்