பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காதல் எங்கே? கொண்டு இப்படிப் பேசுவதைவிடப் பேசாமல் வீட்டுக்காவது போகலாம். சதாசிவம் : எனக்கும் சம்மதம்தான். கடற்கரையின் சுகங்கூட அந்தப் படத்தால் கெட்டுவிட்டது. பானுமதி, கல்கத்தாவிலே இப்படிப் படமெல்லாம் பார்த்திருக்கமாட்டாய். பானுமதி : அண்ணு, கல்கத்தா மட்டும் வேறையா? அங்கும் இதே லட்சணந்தான். இப்போ படித்த பெண்களெல்லாம் இந்தப் படங்களிலிருந்துதான் நடத்தையெல்லாம் கற்றுக்கொள்கிருர்கள். சதாசிவம் : எல்லோரையும் சேர்த்து அப்படிச் சொல் லாதே. இன்னும் நம்முடைய சமூகம் அந்த நிலை மைக்கு வரவில்லை. லலிதா : காதல் செய்து கலியாணம் நடக்காவிட்டால் நம்ம வாழ்க்கை சந்தோஷமாக அமையாது. அதை நீங்கள் மறுக்க முடியாது. பானுமதி : லலிதா, வீட்டுக்குப் போய் இந்தப் பிரச்சினை யைப்பற்றி விவாதிக்கலாம். இங்கே எதுக்கு? லலிதா : சரி பானு, இப்பொழுதே புறப்படுவோம். இவர் கூட வந்தால் சினிமாவை ரசிக்கவே முடிவதில்லை. எல்லாவற்றையும் குற்றஞ் சொல்லிக்கொண்டே இருப்பார். சதாசிவம் : என்ன லலிதா, எழுந்துவிட்டாயே? அந்தக் காதல் பாட்டைக் கேட்டாயல்லவா? காதலி அந்தக் காகிதப் பூக்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்துவிட்டால் காதலன் பாடித்தான்