பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி ஐந்து (கலாரசனைச் சங்கம். சிறுகூட்டம் கூடியிருக்கிறது. தாமோதரன், பானுமதி மேடையில் அமர் துள்ளனர். லலிதா எழுந்துநின்று பேசிக்கொண் டிருக்கிருள். மாலை நேரம். திரை விலகும் போது கைதட்டும் ஒலி கேட்கிறது.1 லலிதா : அன்பர்களே, பெண்கள் முன்னேற்றம் என்ற விஷ்யத்தைப் பற்றி என்னுடைய கருத்துக்களே இது வரை சுருக்கமாகக் கூறினேன். என் பேச்சிலிருந்து மாதர் முன்னேற்றத்திலே நான் எவ்வளவு ஆர்வத் தோடிருக்கிறேன் என்பதை ஓரளவு உங்களுக்கு வெளியிட்டிருக்கிறேனென்று நம்புகிறேன். உங்களு டைய சங்கத்தின் காரியதரிசி அவர்கள் சொற்பொழி வுக்குப்பின்னல் சில பாடல்களும் பாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் இப்பொழுது ஒரு பாட்டைப் பாடி என் கடமையை முடித்துக் கொள்ளலாமென்று நினைக்கிறேன். இதுவரை என் பேச்சைக் கேட்ட உங்களுக்கு என் அன்புகலந்த நன்றி. 1கையெடுத்து வணங்குகிருள். பலமான கைதட்டல். பிறகு பாடத் தொடங்குகிருள் ; மறந்து நீ வாழ்வாய்-இனிமேல் மறப்பதே வாழ்வாம் குழந்தைப் பருவமுதல் கூட நாம் வளர்ந்ததும் கொஞ்சியே இருவரும் ஆடி மகிழ்ந்ததும் (மறந்து நீ)