பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காதல் எங்கே 7 நாளொரு மேனியாய் எழில் கொண்டு நின்றதும் நல்ல கதைகள் சொல்லி சிரித்து மெய்மறந்ததும் (மறந்துநீ) உணர்வெலாம் காதலாய் ஓங்கிய காலத்தில் ஊரைவிட்டே ஆற்றின் ஒரத்தில் சென்றதும் (மறந்து நீ) மாயமாய் நானென்றன் கண்களை இழந்ததும் மனத்தினில் ஓங்கி வந்த கோட்டைகள் இடிந்ததும் (மறந்து நீ) எங்குமே இருள்மயம் ஆனதும் உளந்தனில் எல்லையில்லாத பேர் இருள்வந்து சூழ்ந்ததும் (மறந்து நீ) பதியென யாரையோ கைதொட்ட பின்னரும் பாசத்தால் வந்திங்கே விம்மியின் றழுததும் (மறந்து நீ) [பாட்டின் முடிவில் பலத்த கைதட்டு ஒலி எழுகிறது. லலிதா வணங்கி அமர்கிருள். தாமோதரன் பேச எழுகிருன்..! தாமோதரன் : அன்பர்களே, இன்று நமக்குச் சொற் பொழிவு விருந்தும் அமுதமயமான இசை விருந்தும் அளித்த ரீமதி லலிதா அவர்களுக்கு நமது நன்றி