பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 குற்றவாளி செய்துகொண்டு சந்தோஷமாக வாழவேண்டு மென்று அவர் இந்தப் பங்களாவையே நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிரு.ர். அவருக்கு இப்படி ஒரு அவமானம் உண்டாக்கலாமா ? ராகவன் (கண்டிப்பான குரலில்) : இந் த ப் பேச்சுக் கெல்லாம் இப்போ நேரமில்லை. என் இஷ்டப்படி நடப்பாயா இல்லையா ? சரோஜினி : ஒருவருக்குத் தீங்கு செய்து நாம் சந்தோஷ மாக வாழ முடியாது. ராகவன் : அந்த வேதாந்தமெல்லாம் எனக்கு வேண்டாம். இதோ இந்தக் கடிதாசில் நான் சொல்லுவதை ETGLPSl சரோஜினி நான் உயிரோடு அவருக்குத் தீங்கு செய்ய மாட்டேன். வாசுதேவனுடைய பணத்தை இப்படிப் பெற்றுக் கொண்டதே எனக்குப் பிடிக்கவில்லை. சோமசுந்தரமோ ஒரு உத்தமர். என்மேலுள்ள அன்பினுல் அவர் எதையும் எனக்காகத் தியாகம் பண்ணுவார். அவருக்கு அவமானமோ தீங்கோ ஏற்படுவதற்கு நான் கருவியானுல் பிறகு என் வாழ்க் கையில் இன்பமிராது. நான் அவர் அன்பை மறுத்த காரணத்தால் அவர் அடைந்த துன்பமே போதும். ராகவன் (சற்று யோசனை செய்துகொண்டே) , சரோ ஜினி, நம்முடைய திட்டமெல்லாம் நிறைவேறப் போகிற சமயத்திலே நீ தயங்குகிருய். அப்படியால்ை நாம் சேர்ந்து வாழ முடியாது போலிருக்கிறது. சரோஜிவி : நாம் மணம் செய்துகொண்டு வாழ்வதற்கும் இதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது ? பாங்கியி