பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 57 நீங்கள் அவர்கள் இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் குற்றவாளியாக்கச் சூழ்ச்சிச் செய்கிறீர்கள். ராகவன் : ஆமாம், உன்னோடு சகவாசம் வைத்திருந்த அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப் போகிறேன். சரோஜினி : அவர்கள் எவ்விதமான குற்றமும் செய்ய வில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இப்படிச் சொல்வி அவர்கள் சொத்தைப் பறிப்பதோடு என்னையும் ஏமாற்றப் பார்க்கிறீர்கள். என்மீது உங்களுக்கு அன்பே கிடையாதென்று இப்பொழுது எனக்குத் தெரிகிறது. ராகவன் : அதிகமாகப் பேசாதே-நீ சத்தம் போடுவ தால் இங்கே யாரும் வரப் போவதில்லை. சரோஜினி பக்கத்தில் வீ டே இல்லையென்றுதான் என்னைப் பயமுறுத்த இங்கு அழைத்து வந்தீர்களா ? அந்த உத்தமருடைய அன்பை உதறித் தள்ளிவிட்டு உன்னையே எண்ணிக் கிடந்த எனக்கு இது நன்ருக வேணும். ராகவன் : சரோஜினி-இந்தா பேளுவைப் பிடி......நான் சொல்லுகிறபடி எழுது-இல்லாவிட்டால். (பேணுவைக் கொடுக்க அருகில் வருகிருன்..! சரோஜினி (உறுதியோடு) ; அது முடியாது... ராகவன் : முடியாதா ?...என்ன சொன்னுய் ? (கன்னத்தில் அடிக்கிருன்.) சரோஜினி : ஹா.....(தேம்புகிருள்) ...... இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.