பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 காதல் எங்கே ! லலிதா : அவர் பாங்குக்குப் போய்விட்டாரே? நீங்கள் Այրrրi? தாமோ : நான் ஒரு ஓவியன். லலிதா : ஒவியரா, இவர் ஏதாவது படம் எழுதும்படி tL!fT&;...? தாமோ : இல்லை-நான் ஒவியன் என்ற முறையிலே அவரைப் பார்க்க வரவில்லை. கலாரசனைச் சங்கம் என்று நான் ஒரு சங்கம் ஏற்படுத்தி அதற்குக் காரிய தரிசியாக இருக்கிறேன். அது சம்பந்தமாக அவரைப் பார்க்க வந்தேன், லலிதா : காலையிலே ஒன்பது மணிக்கு முன்னல் வந்தால் அவரைப் பார்க்கலாம். ஆனல் அவர் பிரசங்கம் செய்யவெல்லாம் போகிற பழக்கம் இல்லையே? தாமோ : எங்கள் சங்கத்திலே கலை சம்பந்தமான விவாதங்கள்தான் முக்கியமாக ஏற்பாடு செய் கிருேம்...இவருக்கு சினிமாவைப்பற்றி முக்கியமான சில கருத்துக்கள் உண்டு என்று தெரிந்தேன். அதனலே அதைப்பற்றிச் சொல்லும்படி கேட்டுக் கொள்ள வேணுமென்று எனக்கு ஆசை. லலிதா : அது உங்களுக்கு எப்படித் தெரியும்? தாமே : நான் சொல்லுவதற்காக மன்னிக்கவேணும். அன்றைக்குக் கடற்கரையிலே நீங்கள் பேசிக்கொண் டிருந்த விஷயம் என் காதிலே விழுந்தது. லலிதா : அப்படியா? உங்களுக்கும் அவருடைய கொள்கை தாளு? தாமோ : அவருடைய கருத்துக்கு நேர்மாருண்கருத்து எனக்கு. அதனுல்தான் எங்களுடைய கலாரசனைச்