பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 71 உங்கள் நண்பர்களெல்லாம் உங்களைக் கேலி செய் வார்கள். சதாசிவம் மற்றவர்களைப்பற்றி நீ கவலைப்படாதே. உனக்கே அப்படித் தோன்றுகிறதோ? பானுமதி : அண்ணு, இப்படி நீங்கள் கேட்பது நியாய மில்லை. சதாசிவம் சரி பானு, அந்தப் பாலத்தின்மேல் நடந்த காட்சியைப் பார்த்தாயா? காதலர்கள் வந்தால் எப்படியாவது அந்த இடத்தில் இந்தப் பாலம் வந்து விடுகிறது. பாலமே இல்லாமல் காதலே செய்ய முடியாதா? பானுமதி (சிரித்துக்கொண்டே) : இரண்டு கரைகளையும் அதுதானே ஒன்ருகச் சேர்க்கிறது? சதாசிவம் : அந்தக் காதலனே நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது - கிட்டக் கிட்டப் போகிருன் - முத்தங் கொடுக்கிற மாதிரி என்னேன்னவோ பாவனை பண்ணுகிருன்-ஆனல் வெளிப்படையாக முத்தங் கொடுக்கத்தான் முடிகிறதில்லே-அதையும் பண்ணி விடுவான்-சென்சார் போர்டிலே வெட்டி விடு வார்கள் என்றுதான் பயம்... லலிதா : முத்தங் கொடுத்தால் என்ன தப்பு? சதாசிவம் : தப்பா? தப்புங்கிறது ஒன்றுமே இல்லை. நம்ம சமூகத்திலே இப்படிப் பொது இடத்திலே யாரும் நடந்து கொள்ளமாட்டார்கள். அதுதான் விஷயம். மேல்நாட்டுச் சமூகத்திலே அது வேறு விஷயம். லலிதா அதுதான் படம் பாதிகூட ஆகாமல் எழுந்து வந்துவிட்டோமே. கடற்கரையிலே உட்கார்ந்து