பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 93 வளர்த்தார். படிக்கிற போதெல்லாம் ஹாஸ்டல் வாழ்க்கைதான். வீட்டுப் பழக்கமே அவளுக்குத் தெரியாது. சரோஜா : அது வாஸ்தவந்தான் - மேல்நாட்டு நாவல் களிலே வருகிற விஷயந்தான் வாழ்க்கையின்னு நினைத்துக்கொண்டிருப்பாள். பானுமதி இருந்தாலும், அடிப்படையான கொள்கை எப்படியோ நம்மையெல்லாம் கெட்டியாகப் பிடித் துக் கொண்டிருக்கிறது. அருந்ததி, சாவித்திரி முதலியவர்களின் கதைகள்தான் நம்மை விடாமல் காப்பாற்றுகிறது சரோஜா. லலிதா விஷயமும் அப்படித்தான். சரோஜா : எனக்கும் இந்தமாதிரி சந்தேகம் அடிக்கடி வருகிறது. நேற்று, தாமஸ் ஹார்டி எழுதிய நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அதிலே கணவனையிழந்த கதாநாயகி தனது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகத் தன் உடம்பை விற்றுவிடு கிருள். அதுவே நியாயம் என்பது போல அந்த நாவலைப் படிக்கிறபோது ஏற்படுகிறது. ஆனல், நம் நாட்டுக் கருத்துப்படி இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி எத்தனையோ மாறுபட்ட கருத் துக்களை நாம் மனசிலே வாங்கிக்கொண்டு தொல்லேப் படுகிருேம். பானுமதி : லலிதா விஷயம் இன்னும் வினேதமானது. மகனிடத்திலே அளவுகடந்த பற்றுதலையுடைய தாயைப்பற்றி நீ படித்திருக்கிருயல்லவா ? மனத் தத்துவ சாஸ்திரத்திலே நமக்குக் கற்றுக் கொடுத் தார்களே ?