பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 133 னுடைய உண்மையான கருத்தைச் சொல்லி விடுகிறேன். பேசாமல் ஊருக்கு வந்து இல்லற தர்மத்தை மேற்கொள். நண்பன் என்கிற முறையில் நான் வற்புறுத்திக் கூறுகிறேன். சுப்பிர : இப்பொழுது நான் கலியாணம் செய்து கொள்வ தாக வைத்துக் கொள்வோம். ஊரார் நகைக்க மாட்டார்களா ? ராம : சரியென்று தோன்றியதைச் செய்யத் தைரிய முள்ளவனே மனிதன். நீ துறவு பூண்டதற்காகக்கூடச் சிலர் சிரிக்கிருர்கள். அதற்கென்ன சொல்லுகிருய் ? சுப்பிர : உஸ்...அதோ லக்ஷ்மி வருகிருள். ராம : அடடா, எவ்வளவு ஆவலோடு பேசுகிருய், இன்ைெருத்தி உன்னுடைய பாட்டைப் பாடினளே அவள் பெயர் இப்பொழுதாவது தெரியுமா ? சுப்பிர : அவள்தான் கமலா. ராம : அவள்தான் கமலா என்று என்னமோ சொந்த மாகச் சொல்லுகிருயே ? யாரடா அவள் ? சுப்பிர (சற்று திகைத்து) . இ தோ வருகிருளே அவளுடைய அக்கா அவள். ராம : நீ பார்த்திருக்கிருயா ? சுப்பிர : இல்லை-அவள் வீட்டைவிட்டு வெளியிலேயே வருவ்தேயில்லையாம். ராம : ஏன் அப்படி ? சுப்பிர : அவள் சிறு வயது. கலியாணமாகி ஒரு வருஷத் திற்குள்ளே புருஷன் இறந்து போனம்ை. பாவம் தாயில்லாப் பெண். 9