பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 இளந்துறவி லக்ஷ்மி (அவசரமாக எழுந்து வந்து உற்சாகத்தோடு) : அக்கா, அது அவர் குரலேதான்-இதோ அவரே தான். கமலா (மிகுந்த மகிழ்ச்சியுடன்) : லக்ஷ்மி, சத்தம் போடாதே, பாட்டைக் கேட்கலாம். சுப்பிர (பாட்டு) : பல்லவி உறங்கிடலாமோ-நீதான் ஒடி அகக் கதவை நாடித் திறந்திடாமல் (உறங்) அனுபல்லவி கறங்குபோல் வாழ்வினில் காலமெல்லாம் சுற்றி அறங்கெட வாழ்ந்துபின் அனலிடை மறைவதோ (உறங்) சரணம் பிறவியெடுத்தபயன் பெறுவதே அறிவாம் பேதமை இருள்ஓடப் புரிவதே நெறியாம் மறலியை வென்றவர் மாண்புடை யோராம் மானிட தேகத்தின் குறியிதுவேயாம் (உறங்) (பல்லவியையே மூன்று தடவை திருப்பிப் பாடு கிருன்.) லகஷ்மி : பார்த்தாயா அக்கா-எவ்வளவு இனிமையாகப் பாடுகிருர் ! கமலா : ஆஹா, இந்தப் பாட்டைக் கேட்கக் கொடுத்து வைக்கவேண்டும். லகஷ்மி : புதிது புதிதாக அவர் பாட்டு எழுதிக் கொண்டே இருக்கிரு.ர்.