பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 குற்றவாளி lராகவன் கையை மேலே தூக்கிக்கொண்டு நி ற் கி ரு ன். இன்ஸ்பெக்டர் அவனுடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவனுக்கு விலங்கு மாட்டுகிரு.ர்.) சோமு : பணத்தோடு போயி ரு ந் தால் பங்களா கிடைக்குமா ? வாசு : பங்களாவைத்தான் சரோஜினி உயில் எழுதிக் கொடுத்து விட்டாளே ? சோமு : டேய், இன்னும் இப்படி அபத்தமாகப் பேசிக் கொண்டிருக்காதே. சரோஜினியைத் தீர்த்துக் கட்டிவிட்டுக் கொலைக் குற்றத்தை என்மீது சுமத்தி விட்டால் பிறகு அவன் நிம்மதியாகப் பங்களாவை அனுபவித்துக்கொண்டிருக்க முடியும். ராகவன் : வாசுதேவன் ஆழ்ந்து சிந்திக்கிறவர் அல்ல. அவருக்கு அதெல்லாம் விளங்காது. இன்ஸ் : சோமசுந்தரத்தையும் அப்படி நினைத்துத்தான் நீ ஏமாந்துவிட்டாய். நட, போகலாம். நீ ஒரு பயங்கரமான குற்றவாளி. இப்படித் திட்டம் போட்டுக் குற்றஞ் செய்கிற உனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது. (ராகவனும், இன்ஸ்பெக்டரும் போகிருர்கள். சரோஜினியும், வாசுதேவனும் சோமசுந்த ரத்தை மகிழ்ச்சியோடு பார்த்து நிற்கிரு.ர்கள்.1