பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இள ந் து ற வி முதல் அங்கம் காட்சி ஒன்று (புகழ் பெற்ற சிவஸ்தலமாகிய பேரூரிலே ஒரு சத்தி ரத்தில் ஒரு சாதாரணமான அறை. சுப்பிர மணியம் துறவியைப் போல உடை அணிந்து புவித்தோல்மேல் அமர்ந்திருக்கிருன், அவனுக்கு வயது இருபத்துநான்கிருக்கும். அவனுடன் அவனுடைய நண்பன் ராமநாதன் வார்த்தை பாடிக் கொண்டிருக்கிருன், மாலை ஏழு மணி இருக்கும்.) ராமநாதன் : என்ன சுப்பிரமணியம் - உனக்கு இந்தப் பேரூரே நிலையான வாசஸ்தலமாகி விட்டது போலிருக்கிறது? சுப்பிரமணியன் : எனக்கு நிலையான் வாசஸ்தலம் ஏது? உலகமெல்லாம் எனக்கு வாசஸ்தலம்தான். ராம : இங்கே வந்து இரண்டு மாதம் இருக்குமல்லவா? சுப்பிர : அதனுல் இது நிலையாகிவிடுமா? ராம : நான் அப்படிச் சொல்லவில்லை... ஒரு மாதத்திற்கு மேல் எங்கும் தங்கமாட்டேன் என்று சொல்லு வாயே...அந்த வாக்கு...?